தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு மெல்ல மெல்ல கமர்சியல் திரைப்படங்களான வேலைக்காரன், அயலான், சீமராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம் என்னவென்றால் சமீபத்தில் நா முத்துக்குமார் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஆனந்த யாழை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நா முத்துக்குமார் எழுதிய பாடல்கள் மூலம் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்ற சூர்யா ஆர்யா போன்ற பல பெரிய நடிகர்கள் யாருமே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் சிவகார்த்திகேயன் பொள்ளாச்சியில் பராசக்தி படப்பிடிப்பில் இருந்தாலும் கூட இந்த நிகழ்ச்சிக்காக சூட்டிங்கை ஒதுக்கி வைத்து விட்டு வந்து கலந்து கொண்டு சென்றிருக்கிறார். அதனால் சிவகார்த்திகேயன் நன்றி மறக்காமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.
