கர்ப்பமாக இருக்கின்றேனா? இனி டெஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.. ஆப்பிளின் AI சொல்லிவிடும்.. மருத்துவ உலகில் ஒரு புதிய புரட்சி..!

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை அறிய பல நவீன தொழில்நுட்ப முறைகள் தற்போது வந்துவிட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் கூடுதலாக, மிகவும் துல்லியமாக ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா இல்லையா என்பதை அறிய…

pregnant

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை அறிய பல நவீன தொழில்நுட்ப முறைகள் தற்போது வந்துவிட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் கூடுதலாக, மிகவும் துல்லியமாக ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா இல்லையா என்பதை அறிய ஒரு புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

WBM – நடத்தை மாதிரியின் செயல்பாடு:

ஆப்பிள் நிறுவனம், Wearable Behaviour Model (WBM) அதாவது ‘நடத்தை மாதிரி’ என்ற ஒரு அணியக்கூடிய பொருளை அறிமுகப்படுத்துகிறது. பெண்கள் இதை அணியும் போது, அவர்களுடைய தூக்கத்தின் தரம், அசைவுத் திறன், இதயத்துடிப்பு மாறுபாடு போன்றவற்றை துல்லியமாகக் கணக்கிடுகிறது. இந்தத் தகவல்களை ஆய்வு செய்து, ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை என்பதை 92 சதவீதம் துல்லியமாக கணித்து சொல்வதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஒருங்கிணைப்பு:

இந்த WBM சாதனம், பயனர்கள் வைத்திருக்கும் ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச்களில் இருந்து கிடைக்கும் தகவல்களைக் கொண்டு ஆய்வு செய்கிறது என்றும், இதன் மூலம் தான் கர்ப்பம் துல்லியமாகக் கண்டறியப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவப் புரட்சி:

எனவே, இனிமேல் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள பிரக்னன்சி டெஸ்ட் கூட தேவை இல்லை என்றும், இந்த சாதனம் அபாரமாக கண்டறிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த சாதனம், ஏற்கனவே 50 வயதுக்கு உட்பட்ட 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பமாக இல்லாத பெண்களின் தரவுகளை (data) பகுப்பாய்வு செய்துள்ளது. அவர்கள் கர்ப்பமாகும் போது, அவர்களின் உடலில் உள்ள சிக்னல்கள் மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாறுபாடுகளை கண்டறிந்து, கர்ப்பம் என்பதை உறுதி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருப்பதால், உண்மையான சுகாதார நிலைகளுடன் பொருத்தமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்தச் சாதனத்தை அணிந்தாலே ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை தெரிந்துகொள்ளலாம் என்றும், இது மருத்துவ உலகில் ஒரு புதிய புரட்சியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.