சீமானுக்கு இதுவரை இருந்த ஒரே சாதகமான அம்சம், இளைஞர்களின் வாக்குகள் அவருக்கு கிடைத்துக்கொண்டிருந்தது. அவரது ஆவேசமான பேச்சை நம்பி ஒரு சிலர் ஏமாந்து கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த இளைஞர்களும் விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் விஜய் பக்கம் சென்றுவிட்டதால் சீமான் கிட்டத்தட்ட ‘ஜீரோ’ ஆகிவிட்டார் என அரசியல் வியூக நிபுணர்கள் YouTube சேனல்களில் பேட்டி அளித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமானின் கட்சியை எந்த கூட்டணியும் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை என்றும், அதனால்தான் அவர் தனித்து போட்டியிடுகிறார் என்றும் கூறப்படுகிறது. அவரே ஏதாவது ஒரு கூட்டணியில் சேருகிறேன் என்று கூறினால் கூட, எந்த கூட்டணியும் அவரை சேர்க்காது என்றும், ஏனென்றால் அவரிடமிருந்த இளைஞர்களின் வாக்குகள் மொத்தமாக விஜய்க்கு போய்விட்டதால், அவர் கிட்டத்தட்ட ‘ஜீரோ’ தான் என்றும் கூறி வருகின்றனர்.
அதிமுக கூட்டணி கைகொடுக்குமா?
இருப்பினும், அவர் அதிமுக கூட்டணியில் இணைந்தால் ஓரளவுக்கு கட்சியை காப்பாற்றிக்கொள்ளும் அளவுக்கு தப்பிக்கலாம் என்றும், இல்லையென்றால் 2026 ஆம் ஆண்டு தேர்தல் தான் அவருக்கு கிட்டத்தட்ட கடைசி தேர்தலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
வாக்கு சதவிகித சரிவு குறித்த கணிப்புகள்:
சீமானுக்குக் கிடைத்த வாக்குகளில் பெரும் சதவீதம் விஜய் ரசிகர்கள் தான் என்றும், தற்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கிவிட்டதால் சீமானை கழட்டிவிட்டு விஜய்க்கு வந்துவிட்டார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எனவே, இப்போது அவரிடம் இருக்கும் எட்டு சதவீத வாக்கு அடுத்த தேர்தலில் இரண்டு அல்லது மூன்று சதவீதம் குறையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வாக்கு புள்ளிவிவரங்களின் ஒப்பீடு:
அதுமட்டுமின்றி, 234 தொகுதிகளிலும் போட்டியிட்டுதான் அவர் எட்டு சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார் என்றும், தமிழகத்தில்கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சீமானுக்கு கிடைத்தது 6.5%, அதாவது 234 தொகுதிகளிலும் போட்டியிட்டவர் வெறும் 30 லட்சம் வாக்குகள்தான் வாங்கியுள்ளார். சராசரியாக ஒரு தொகுதிக்கு அவர் 13,000 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். மேலும், 234 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் அவரது கட்சி டெபாசிட் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு மாறாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு கிட்டத்தட்ட 4.5 லட்சம் வாக்குகள் வாங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்குகள் வாங்கியது. ஆனால், சீமானின் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 30 லட்சம் வாக்குகள்தான் வாங்கியுள்ளது என்பதும், எனவே விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒப்பிடும்போது நாம் தமிழர் கட்சி வாங்கியது வாக்குகளே இல்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
எதிர்காலம் குறித்த கணிப்புகள்:
அரசியல் வியூக நிபுணர்கள், விஜய் கட்சி வளர வளர சீமானின் கட்சி தேய்ந்து கொண்டே போகும் என்றும் கூறி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

