இளைஞர்களின் வாக்குகள் மற்றும் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் விஜய் பக்கம் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில், விஜய்க்கு இணையாக உதயநிதியை முதல்வர் வேட்பாளராக களம் இறக்கி இளைய தலைமுறைகளின் வாக்குகளை கவர திமுக திட்டமிட்டு வருவதாக சமூக வலைதளங்களில் மிக வேகமாக ஒரு வதந்தி பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வரும் தேர்தலில் உதயநிதி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
திமுகவைப் பொறுத்தவரை மு.க. ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்று திமுகவின் சீனியர் தலைவர்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்த தேர்தலில் உதயநிதி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஒரு சிலர் மட்டும் கூறி வருகின்றனர். “இதுவரை இருந்த தேர்தல் களம் வேறு, இப்போது இருக்கும் தேர்தல் களம் வேறு” என்றும், விஜய் தற்போது புதிதாக களமிறங்கியுள்ளதால், “விஜய்க்கு இணையாக ஒரு இளம் தலைவரை அவருக்கு எதிராக போட்டியிட வைத்தால் தான் இளைஞர்களின் வாக்குகளை பிரிக்க முடியும்” என்று திமுக திட்டமிடுவதாகத் தெரிகிறது. எனவே, உதயநிதி முதல்வர் வேட்பாளராக அறிவித்து திமுக களத்தில் இறங்கினால் விஜய்யை வீழ்த்த முடியும் என்று நம்புவதாக ஒரு வதந்தி பரவுகிறது.
ஆனால், இது முழுக்க முழுக்க வதந்தி என்றும், தமிழக முதல்வர் வேட்பாளர் திமுகவை பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலின் தான் என்றும், அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும், இது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்றும் கூறப்பட்டு வருகிறது.
“ஏற்கனவே ஸ்டாலின் vs விஜய் என்று போட்டி வந்தால் கண்டிப்பாக ஸ்டாலின் வென்று விடுவார் என்றும், ஆனால் விஜய் vs உதயநிதி என்ற போட்டி வந்தால் விஜய் எளிதில் வெற்றி பெற்றுள்ளார்” என்றும் கூறி வருகின்றனர். எனவே, 2026 இல் அந்த ரிஸ்க்கை திமுக எடுக்காது என்றும், கண்டிப்பாக உதயநிதியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காது என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் அதே நேரத்தில், உதயநிதி தான் திமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருப்பார் என்றும், தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து விஜய்க்கு பதிலடி கொடுப்பார் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
