ஓய்வு பெறுவதற்கு முன்பே மொத்த PF பணமும் எடுக்க வேண்டுமா? இந்த ஒன்றை செய்தால் போதும்.. மத்திய அரசின் அதிரடி முடிவு..!

  பொதுவாக ஓய்வு பெற்ற பின்னர்தான் PF பணம் கிடைக்கும் என்ற நிலையில், தற்போது ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே முழு PF பணத்தையோ அல்லது பகுதியாகவோ எடுத்து கொள்ள அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு…

pf

 

பொதுவாக ஓய்வு பெற்ற பின்னர்தான் PF பணம் கிடைக்கும் என்ற நிலையில், தற்போது ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே முழு PF பணத்தையோ அல்லது பகுதியாகவோ எடுத்து கொள்ள அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு PF என்ற வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த பணத்தை ஓய்வு பெறுவதற்கு முன்பு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ எடுக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏன் இந்த மாற்றம்?
தற்போதைய விதிகளின்படி, ஊழியர்கள் 58 வயதில் ஓய்வு பெறும் முன்பு முழுமையாக PF பணத்தை எடுக்க முடியாத நிலையில், இனி மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி விரைவில் முழுமையாக எடுத்துக் கொள்ளலாம் என்ற மாற்றம் வர இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் ஊழியர்கள் பலரும் திடீரென வேலை பிடிக்காமல் வெளியே வந்து சொந்த தொழில் செய்வதாகவும், தங்கள் தொழில் பாதையை மாற்றி கொள்வதாகவும், குறிப்பாக ஃப்ரீலான்ஸ் தொழிலை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேலையிலிருந்து நின்றுவிட்டு ஒரு புதிய வணிகத்தை தொடங்குவதோ அல்லது முன்கூட்டியே ஓய்வு பெறும் முடிவை எடுத்தாலும், அவர்களது பி.எஃப். பணம் என்பது 58 வயது வரை அவர்களுக்கு உதவாத நிலை உள்ளது. இந்த நிலையில், இது போன்ற நபர்களுக்கு மொத்த PF பணத்தையும் முன்கூட்டியே எடுக்க சில சலுகை அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

யாருக்குப் பொருந்தும்?
ஆனால் அதே நேரத்தில், வேலையை விட்டுவிட்டு தொழிலைத் தொடங்கப் போவதாக பணியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்றும், அதேபோல் குடும்ப காரணங்களுக்காக வேலையை விடுவதாக முடிவெடுக்கும் பெண்கள் அதை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும், முன்கூட்டியே ஓய்வு பெற திட்டமிடும் இளம் பணியாளர்கள் மற்றும் 58 வயது வரை வேலை செய்யாத குறுகிய கால வேலைகளில் உள்ளவர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.

EPF-ல் சமீபத்திய மாற்றங்கள்:
PF பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடியாக UPI மூலம் பணம் எடுக்கும் வசதியையும், 5 லட்ச ரூபாய் வரையிலான கோரிக்கைகளின்படி பணம் எடுக்கும் வசதியையும், எளிமைப்படுத்தப்பட்ட ஆவணங்களின்படி பணம் எடுக்கும் வசதியையும், மூன்று ஆண்டுகள் சேவைக்குப் பிறகு 90 சதவீதம் வரை ரியல் எஸ்டேட் வாங்குவதற்கு பணம் எடுக்கும் வசதியையும் ஏற்கனவே மத்திய அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நிபந்தனை:
ஆனால் அதே நேரத்தில், PF பணத்தை முழுமையாக எடுப்பதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் PF பணம் கட்டியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலனை செய்து வருவதாகவும், மாறிவரும் வேலைவாய்ப்புக்கு ஏற்ப PF பணத்தை எடுக்கும் முறைகளையும் மாற்றம் தேவை என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த சீர்திருத்தம் PF வகையில் கொண்டுவரப்பட்டால், இந்தியாவில் பாதியிலேயே வேலையை விட்டுவிட்டு செல்லும் நபர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.