சிவகார்த்திகேயன் நடிகர் கிங்காங் வீட்டுக்கு சென்றது விமர்சனங்களுக்கு பயந்து தானா…? ஒருவேளை அப்படி இருக்குமோ…?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது…

sk

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு மெல்ல மெல்ல கமர்சியல் திரைப்படங்களான வேலைக்காரன், அயலான், சீமராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் தற்போது நடிகர் கிங்காங் இன் மகள் திருமணம் நடந்தது. அவர் அனைவருக்கும் பத்திரிகை வைத்தும் ஒரு பிரபலங்களும் அவர் வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளாததால் ரசிகர்கள் கொந்தளித்து விட்டார்கள். இதனால் பல நடிகர்கள் பயந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். அதில் வடிவேலு திருமணத்தன்று ஒரு லட்ச ரூபாய் மொய் கொடுத்துவிட்டு போனில் பேசியதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிகர் கிங்காங் அவர்களின் வீட்டிற்கு சென்று மணமக்களை வாழ்த்தி மரியாதை செய்து இருக்கிறார். நடிகர் கிங்காங்கின் மகள் சிவகார்த்திகேயனின் ஃபேன் என்று கூறப்படுகிறது.

இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் நிறைய விமர்சனங்களும் வருகிறது. சினிமா ரசிகர்கள் கொந்தளித்து விட்டதால் விமர்சனங்களுக்கு பயந்து தான் சிவகார்த்திகேயன் கிங்காங் வீட்டிற்கு சென்றிருக்கிறார் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். மற்றொரு சாரார் கூட்டத்தோடு கூட்டமாக சென்றால் தெரியாது தனியாக சென்றால்தான் பப்ளிசிட்டி தேட முடியும் என்று சிவகார்த்திகேயன் தனியாக சென்று இருக்கிறார் என்றும் ஒரு சாரார் பேசி வருகின்றனர். ஆனால் சிவகார்த்திகேயன் மிகுந்த அன்போடு கிங்காங் வீட்டிற்கு சென்று பணிவுடன் குடும்பத்தினருடன் பேசி பழகி போட்டோ எடுத்து விட்டு வந்திருக்கிறார் அதை குறை சொல்லாதீர்கள் என்றும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.