கூகிள் நிறுவனம் Gemini AI Pro அம்சத்தை இந்திய மாணவர்கள் மட்டும் இலவசமாக பெறலாம் என அறிவித்தது. இதன் ஒரிஜினல் விலை ரூ.19,000 க்கும் அதிகமான உள்ள நிலையில் இந்திய மாணவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை என்றும், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.
கூகிள் ஏன் இந்த மாணவர் சலுகையை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது என்பதற்கு ஒரு முக்கிய காரணம். இந்த மாணவர் சலுகையை கூகிள் இந்தியாவில் கொண்டு வருவதற்கு ஒரு ஆய்வை மேற்கோள் காட்டுகிறது. இந்த ஆய்வு, இந்தியாவில் Gemini AI Pro ஏ.ஐ.யை பயன்படுத்தும் 95 சதவீத மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் அதிக நம்பிக்கையுடன் உணர்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
இந்த சலுகையை இந்தியாவில் யார் விண்ணப்பிக்கலாம்?
Gemini AI Proவை இலவசமாக பயன்படுத்தும் சலுகைக்கு நீங்கள் தகுதி பெற கூகிள் சில நிபந்தனைகளை நிர்ணயித்துள்ளது:
18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
பள்ளி அல்லது கல்லூரி மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி உங்கள் மாணவர் நிலையை சரிபார்க்க வேண்டும்.
தனிப்பட்ட கூகிள் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
பதிவு செய்யும் போது, தகுதியுள்ள கட்டண முறையுடன் ஒரு கூகிள் பேமெண்ட்ஸ் (Google Payments) கணக்கு இருக்க வேண்டும்.
கூகிள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக Google AI Pro க்கு சந்தா செலுத்த வேண்டும்.
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பயின்று கொண்டிருக்க வேண்டும்.
இந்த 1 வருட இலவச சலுகை முடிந்ததும், கூகிள் உங்களிடம் கூகிள் ஒன் (Google One) சந்தாவுக்கான நிலையான மாதாந்திர கட்டணத்தை வசூலிக்கும்.
இந்த நிபந்தனைகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்தால், கூகிள் ஜெமினி ஏ.ஐ. புரோ சலுகை பக்கத்திற்கு சென்று, பள்ளி அல்லது கல்லூரி பெயர், பிறந்த தேதி மற்றும் மின்னஞ்சல் ஐ.டி. போன்ற விவரங்களை பூர்த்தி செய்யலாம்.
Google AI Pro பயன்படுத்துவதால் உங்களுக்குக் கிடைக்கும் பலன்கள்:
உங்கள் கூகிள் கணக்குடன் இணைக்கப்பட்ட புகைப்படங்கள், டிரைவ் மற்றும் ஜிமெயில் (Gmail) ஆகியவற்றுக்கு 2 டி.பி. (TB) கிளவுட் ஸ்டோரேஜ்.
ஏ.ஐ. திரைப்படம் தயாரிக்கும் ஆப் ‘ஃப்ளோ’ (Flow) இந்தத் திட்டத்துடன் கிடைக்கும்.
நோட்புக் எல்.எம். பிளஸ் (NotebookLM Plus) அணுகல்.
கூகிள் ஆப்ஸான டாக்ஸ் (Docs), ஜிமெயில் மற்றும் ஷீட் (Sheet) முழுவதும் செயல்படும் ஜெமினி அசிஸ்டன்ட் (Gemini Assistant).
இந்தச் சலுகை செப்டம்பர் 15, 2025 அன்று காலாவதியாகும். அதற்குள் அதை பெற வேண்டும் என்று கூகிள் தனது பதிவில் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த இலவச சலுகை இந்திய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
