ரஜினிகாந்த் இன்று வரை சூப்பர்ஸ்டார் அந்தஸ்தைத் தக்க வைப்பது எப்படி? இதுதான் காரணமா?

‘சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்’னு ஒரு பாடல் ரஜினியின் ராஜா சின்ன ரோஜா படத்தில் இடம்பெற்றது. அதே போல ரஜினி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஸ்டைல். இன்னொரு விஷயம் எளிமை.…

‘சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்’னு ஒரு பாடல் ரஜினியின் ராஜா சின்ன ரோஜா படத்தில் இடம்பெற்றது. அதே போல ரஜினி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஸ்டைல். இன்னொரு விஷயம் எளிமை. ரஜினி இன்று வரை அதாவது 74வது வயதான போதும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தோடு இருக்கிறாரே? அதெப்படின்னு பலருக்கும் கேள்வி எழலாம். வாங்க அதற்கான பதிலைப் பார்க்கலாம்.

ஆகஸ்டு 15, 1975ல ரஜினிகாந்த் நடித்த அபூர்வ ராகங்கள் படம் ரிலீஸ் ஆனது. அப்படி வெளியாகி ரஜினி கதாநாயகனாகி நாளடைவில் வசூல் சக்கரவர்த்தி ஆனார். தற்போது ஆகஸ்டு 14, 2025 அன்று சரியாக 50 வருடங்கள் கழித்து கூலி படம் ரிலீஸ் ஆகிறது. இந்த 50 வருட ரஜினியின் திரைப்பயணம் குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்தின் திரைப்பயணத்தைப் பொருத்த அளவிலே ஆரம்பகாலத்தில் அது ரோஜாப்பூக்களால் அலங்கரிக்கப்படவில்லை. கல்லும், முள்ளுமான கரடுமுரடான பாதை. அதைக் கடந்துதான் அவர் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தைப் பெற்றார். அந்தப் பட்டத்தை அவர் ஆண்டாண்டு காலமாகத் தக்க வைக்க முடிகிறதென்றால் அதற்கு முக்கியமான காரணம்னா அவரோட எளிமை.

மிகப்பெரிய உயரத்தைத் தொட்டதுக்குப் பின்னாடி எளிமையாகப் பழகுற அந்தப் பண்பு இருக்கே அது அவரோட தனி சொத்து என்கிறார் சித்ரா லட்சுமணன். தற்போதும் சுறுசுறுப்புடன் ரஜினி இளம் இயக்குனர் லோகேஷ் உடன் கைகோர்த்து கூலி படத்தில் நடித்து வருகிறார். வரும் ஆகஸ்டு 14ல் திரைக்கு வரும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.