NOC செர்டிபிகேட்டை இலவசமாக வாரி வழங்கும் தனுஷ்… என்னடா நடக்குது இங்க…?

தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தற்போது வளர்ந்து வரும் பிரபலமான இயக்குனராக இருக்கிறார். இவரது தந்தை கஸ்தூரிராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் இவரது சகோதரர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும்…

dhanush

தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தற்போது வளர்ந்து வரும் பிரபலமான இயக்குனராக இருக்கிறார். இவரது தந்தை கஸ்தூரிராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் இவரது சகோதரர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார்.

2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் தனுஷ். ஆரம்பத்தில் இவரது தோற்றத்திற்காக மிகவும் கேலி கிண்டலுக்கு உள்ளானார். ஆனால் அதையும் தாண்டி தற்போது பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.

இயக்குனராக தற்போது புது அவதாரம் எடுத்துள்ள தனுஷ் சமீபத்தில் ராயன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அது நூறு கோடி வசூலை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால் இது எதிர்பார்த்த அளவு போகவில்லை. அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படம் வெளிவர இருக்கிறது. தற்போது தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

தற்போது தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே என் ஓ சி சர்டிபிகேட் நயன்தாராவுக்கு வழங்குவது தொடர்பாக சர்ச்சையில் சிக்கினார் தனுஷ். ஆனால் இப்போது பலருக்கு என்ஓசி சர்டிபிகேட்டை இலவசமாக வாரி வழங்குகிறார் தனுஷ். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை சாயலில் சிம்பு நடிக்கும் படத்திற்கு இலவசமாகவே என் ஓ சி சர்டிபிகேட்டை வழங்கி. இருக்கிறார் தனுஷ் அடுத்ததாக youtuber விஜே சித்து இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமாகவும் டயங்கரம் என்ற படத்திற்கு விஐபி படத்தின் பாடலை பயன்படுத்துவதற்காக சித்து அவர்களுக்கு இலவசமாக என் ஓ சி சர்டிபிகேட் வழங்கி இருக்கிறாராம் தனுஷ். அதாவது நயன்தாராவை தவிர அனைவருக்குமே இலவசமாக என் ஓ சி சர்டிபிகேட் வழங்கி வருகிறார் தனுஷ். இதனால் சினிமா வட்டாரங்களில் என்னடா நடக்குது இங்கே என்று பேசிக்கொள்கிறார்கள்.