உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் இன்ஸ்டாகிராமில் தங்களது பக்கத்திற்கு அதிகமான ஃபாலோயர்கள் வரவேண்டும் என்பதற்காக செய்த அநாகரிகமான செயல் காரணமாக, தற்போது மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதளம் என்பது இன்றியமையாத அம்சமாக உள்ளது என்பதும், கிட்டத்தட்ட எல்லோருமே அனைத்து சமூக வலைதளங்களிலும் கணக்குகள் வைத்து தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பதும் தெரிந்தது. சில சமயம் எல்லை மீறி ஒரு சிலர் பதிவுகளை செய்தாலும், சமூக வலைதளம் என்பது ஒரு ஆரோக்கியமான விஷயமாக தான் இன்று வரை பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஃபாலோயர்கள் மற்றும் லைக்குகளை அதிகரிப்பதற்காகவும், அதிக வருமானம் பெறுவதற்காகவும் சிலர் எல்லை மீறி செயல்படுவதுதான் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.
உத்தரப்பிரதேசம், சம்பல் என்ற பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு கணக்கை தொடங்கி, அதில் ஆபாசமான வீடியோக்களையும், அநாகரிகமான வார்த்தைகளையும் பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த பக்கத்திற்கு அதிக அளவு ஃபாலோயர்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, இந்த பிரபலத்தை வைத்து அவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு பெரிய தொகையை சம்பாதித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பாலோயர்களை அதிகரிக்கவும், அவர்களை திருப்தி செய்யவும், லைக்குகளை அதிகரிக்கவும் இந்த பெண்கள் தங்களது ஆபாச வீடியோக்களை பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொச்சையான வார்த்தைகள், கெட்ட கெட்ட வார்த்தைகளை கேப்ஷனாகவும் பயன்படுத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை விளம்பரம் செய்வதற்கும் ஒரு நபர் பயன்படுத்தப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து, இந்த மூன்று பெண்களும் அந்த ஆணும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், மெஹருல் நிஷா என்ற பரி, மெஹக் மற்றும் ஹீனா ஆகியவர்கள் தான் அந்த மூன்று பெண்கள் என்றும், ஜர்ரார் என்பவர்தான் இந்த பெண்களுக்கு விளம்பரப்படுத்துவதில் உதவி செய்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது நால்வரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
சமூக வலைதளம் என்பது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை கொண்டுவர பயன்படுத்தப்படும் ஒரு அம்சமாக இருக்க வேண்டுமே தவிர, ஆபாசங்களையும், அநாகரிகமான வார்த்தைகளையும் பயன்படுத்துவது முறையற்றது என்று இந்த பெண்களின் கைதுக்கு பலர் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். “அவர்களை ஜெயிலில் போடுங்க சார், அப்போதான் இது போன்று ஒரு குற்றம் மேலும் நடக்காமல் இருக்கும்” என்றும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
