மனித தோல் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதா டெடி பியர் பொம்மை? கலைப்படைப்பாக இருந்தாலும் இப்படியா? குவியும் கண்டனங்கள்..!

அமெரிக்காவில் மனித தோலால் செய்யப்பட்டதை போன்று தோற்றமளித்த டெடி பியர் பொம்மை ஒன்றை போலீசார் கண்டுபிடித்த நிலையில், அதை ஆய்வுக்கு அனுப்பி உண்மையை கண்டுபிடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா…

doll

அமெரிக்காவில் மனித தோலால் செய்யப்பட்டதை போன்று தோற்றமளித்த டெடி பியர் பொம்மை ஒன்றை போலீசார் கண்டுபிடித்த நிலையில், அதை ஆய்வுக்கு அனுப்பி உண்மையை கண்டுபிடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையம் அருகே மனித தோலால் செய்யப்பட்டது போன்று தோன்றும் ஒரு விசித்திரமான டெடி பியர் பொம்மை கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் உஷாராகி, அந்த பொருள் உயிருள்ள தோற்றம் கொண்டது போன்று இருப்பதாகவும், அதன் தோல் மற்றும் முக அம்சங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அதனால் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் அந்த டெடி பியர் பொம்மையை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், உண்மையான மனிதனின் சதை போன்று நிறமுடைய அந்த பொம்மையின் வடிவமைப்பில் மூக்கு, உதடுகள், கண்குழிகள் ஆகியவை மிகைப்படுத்தப்பட்டதாக இருந்ததாகவும், அதுமட்டுமின்றி அறுவை சிகிச்சை செய்தது போன்ற தையல் வேலைப்பாடுகளும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், இந்த உருவம் இந்த பொம்மையை செய்ய உண்மையான மனித தோலை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் பலரும் கூறினர். இதனை அடுத்து காவல்துறை அந்த பொம்மையை கைப்பற்றி தடயவியல் நிபுணர்களுக்கு அனுப்பிய நிலையில், அந்த பொம்மையில் எந்தவிதமான மனித திசுக்களும் பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

மனித தோலால் மூடப்பட்டது போல் இருந்தாலும், இது ஒரு கலை படைப்புதான் என்றும், இணையதளம் மூலம் இந்த பொம்மை விற்கப்படுவதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், இந்த பொம்மையை செய்தவர் ராபர்ட் கெல்லி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், “நான் தான் அந்த பொம்மையை செய்தேன். எனக்கு வந்த ஆர்டரின் பெயரில் செய்தேன். வாடிக்கையாளரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று தெரிவித்தார்.

மேலும், “நாங்கள் உண்மையான மனித தோலை பயன்படுத்தவில்லை. மனித மாடல்களில் இருந்து அச்சுக்களை எடுத்து யதார்த்தமான தோல் போல் செய்திருக்கிறோம்” என்றும் கூறிய அவர், டெடி பியர் பொம்மைகள் மட்டுமின்றி, சோபாக்கள் உட்பட பல பொருட்களில் இந்த தோலைப் பயன்படுத்தி உள்ளோம்” என்றும் தெரிவித்தார். ஆனால், அதே நேரத்தில், அவை அனைத்துமே செயற்கையானவை என்றும், கலை அம்சத்துடன் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த டெடி பியர் பொம்மைக்கு இணையதளங்களில் பலர் எதிர்வினையாற்றி வருகின்றனர். “என்ன தான் கலைப் படைப்பாக இருந்தாலும், அது மனித தோலை போன்ற ஒரு பொருளை பயன்படுத்தியது சரியானது இல்லை என்றும், மிகைப்படுத்தப்பட்ட கலையாக இருக்கிறது என்றும், மனிதர்களை கவலைக்கிடமாகவும் சங்கடப்படுத்தும் வகையில் ஒரு கலை அம்சம் தேவையில்லை” என்றும் கருத்து கூறி வருகின்றனர்.