ஆல் ஏரியா நம்ம ஏரியா தான்.. கலர் டிவி கொடுத்த கருணாநிதியையே தோற்கடித்தவர்கள் நம் மக்கள்.. விஜய் கட்சியில் சேரும் பிரபலங்கள்.. தவெகவுக்கு 200 தொகுதிகள் உறுதி..!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் எட்டு மாதங்களே இருக்கும் நிலையில், இப்போதே தமிழக ஊடகங்கள், இணையதளங்கள், யூடியூப் சேனல்கள் ஆகியவை அரசியல் விமர்சகர்கள், அரசியல் வியூக நிபுணர்கள், மூத்த பத்திரிகையாளர்களிடம் தேர்தல் குறித்த பேட்டிகளை…

vijay4

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் எட்டு மாதங்களே இருக்கும் நிலையில், இப்போதே தமிழக ஊடகங்கள், இணையதளங்கள், யூடியூப் சேனல்கள் ஆகியவை அரசியல் விமர்சகர்கள், அரசியல் வியூக நிபுணர்கள், மூத்த பத்திரிகையாளர்களிடம் தேர்தல் குறித்த பேட்டிகளை எடுத்து ஒளிபரப்பி வருகின்றன. இதில் பெரும்பாலான பேட்டிகள் விஜய்யை மையப்படுத்தி அமைந்துள்ளன.

தி.மு.க. எடுத்த ரகசிய சர்வேயில் கூட விஜய்க்குத்தான் அதிக சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று வந்திருப்பதாகவும், எனவே விஜய் கட்சியில் சேர சில பிரபலங்கள் தயாராகிவிட்டதாகவும், தேர்தல் நாள் நெருங்க நெருங்க விஜய் கட்சிக்கு கிடைக்கும் ஆதரவு அதிகரிக்கும் என்றும், விஜய்க்கு 200 தொகுதிகள் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் என்ற கட்சிக்கு இதுதான் முதல் தேர்தல். டெல்லி போன்ற சிறிய மாநிலங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய கட்சி ஆரம்பித்து ஒரே தேர்தலில் வெற்றி பெறுவது பெரிய விஷயம் அல்ல. ஆனால், தமிழ்நாடு போன்ற 234 தொகுதிகள் உள்ள ஒரு பெரிய மாநிலத்தில், கட்சி ஆரம்பித்த இரண்டே வருடத்தில் ஆட்சியைப் பிடிப்பது என்பது மிகவும் அசாதாரணம். ஆந்திராவில் என்.டி.ஆர். ஆட்சியை பிடித்தது போல் தமிழகத்தில் விஜய் ஆட்சியைப் பிடிப்பார் என்றும், அவரது சினிமா கவர்ச்சி என்பது மக்களுக்கு ஒரு அறிமுகம் தான் என்றும், அவரது அரசியல் நடவடிக்கைகள் நிச்சயம் மக்கள் மத்தியில் எடுபடும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

விஜய் ஆட்சியை பிடிக்கிறாரோ இல்லையோ, அது இரண்டாவது விஷயம். ஆனால், தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் மக்களுக்கு பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த இரண்டு கட்சிகளிடமிருந்து தங்களை காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என்று மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக ஏங்கிக் கொண்டிருந்தனர். விஜயகாந்த் வந்தார், ஏமாற்றினார். கமல்ஹாசன் வந்தார், சரத்குமார் வந்தார், ஏமாற்றினார். வந்தவர்கள் எல்லாமே மீண்டும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்த நிலையில், விஜய் மட்டும் தான் தைரியமாக தி.மு.க. தனது அரசியல் எதிரி, பா.ஜ.க. தனது கொள்கை எதிரி என கூறியதால் மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை வந்துள்ளது. எனவே, தி.மு.க., அ.தி.மு.க. மீது அதிருப்தியில் இருக்கும் வாக்காளர்கள் கண்டிப்பாக விஜய்க்குத்தான் வாக்களிப்பார்கள். ஒரு புதிய கட்சிக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று முதன்முதலாக மக்கள் முடிவெடுப்பார்கள் என்று அரசியல் வியூக நிபுணர்கள் பேட்டி அளித்து வருகின்றனர். மேலும் கலர் டிவி கொடுத்த கருணாநிதியையே தோற்கடித்தவர்கள் நம் மக்கள், எனவே 1000 ரூபாய் உதவித்தொகையால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற எண்ணமெல்லாம் இங்கு எடுபடாது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த ஆட்சியின் அதிருப்தி, அதற்கு முன்பு 10 ஆண்டுகளாக நடந்த ஆட்சியின் அதிருப்தி காரணமாக விஜய் வெற்றி பெறுவார் என்றும், விஜய்க்கு குறைந்தபட்சம் 200 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதே நேரத்தில், கட்சி ஆரம்பித்த இரண்டே வருடங்களில் பூத் கமிட்டி உட்பட அடிப்படை கட்டமைப்புகளை அமைத்து, முதல் தேர்தலில் வெற்றி பெறுவது சாத்தியமில்லாதது என்றும், விஜய்க்கு சினிமா கவர்ச்சி மற்றும் ஓரளவு அரசியல் அனுபவம் இருந்தாலும், அதிகபட்சம் எதிர்க்கட்சியாகத்தான் வர முடியும் என்றும், முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிப்பது என்பது சாத்தியமற்றது என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த இரு தரப்பு கருத்துக்களும் பரவலாக இணையதளங்களில் பரவி வரும் நிலையில், விஜய் முதல்முறையாக இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீழ்த்தி ஆட்சியை பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சியாக உட்காருவாரா? அல்லது படுதோல்வி அடைந்து மீண்டும் சினிமாவுக்கு வந்து விடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.