ஹெட்மாஸ்டருக்கே பாடம் எடுக்குறீங்களா? அதிமுகவை ஏன் விமர்சனம் செய்யவில்லை? அர்த்தமில்லாத கேள்வியை கேட்கும் அரசியல் விமர்சகர்கள்.. TVK

பா.ஜ.க.வை தனது கொள்கை எதிரி என்றும், தி.மு.க.வை தனது அரசியல் எதிரி என்றும் கூறிய விஜய், அ.தி.மு.க.வை ஏன் விமர்சனம் செய்யவில்லை? அ.தி.மு.க. மீது மட்டும் சாஃப்ட் கார்னர் இருப்பது ஏன்? ஒருவேளை அ.தி.மு.க.வுடன்…

vijay eps mks

பா.ஜ.க.வை தனது கொள்கை எதிரி என்றும், தி.மு.க.வை தனது அரசியல் எதிரி என்றும் கூறிய விஜய், அ.தி.மு.க.வை ஏன் விமர்சனம் செய்யவில்லை? அ.தி.மு.க. மீது மட்டும் சாஃப்ட் கார்னர் இருப்பது ஏன்? ஒருவேளை அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க திட்டமா? என்ற கேள்விகளை “அரசியல் விமர்சகர்கள்” என்ற போர்வையில் இருக்கும் தி.மு.க. ஆதரவாளர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இது அர்த்தமற்ற கேள்வி என தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் பதிலளித்து வருகின்றனர்.

தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் மீதுதான் விமர்சனம் வைக்க முடியும் என்றும், தமிழகத்தில் தி.மு.க.வும், மத்தியில் பா.ஜ.க.வும் ஆட்சியில் இருக்கும் நிலையில், அவர்களது ஆட்சி மீதுதான் விமர்சனம் வைக்க முடியுமே தவிர, தோல்வியடைந்து ஓரமாக இருக்கும் கட்சி மீது எதற்காக விமர்சனம் வைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

அ.தி.மு.க. மீது சாஃப்ட் கார்னர் எல்லாம் கிடையாது என்றும், அ.தி.மு.க. செய்த தவறுக்கும் ஊழலுக்கும் மக்கள் தண்டனை அளித்துவிட்டார்கள் என்றும், இனிமேலும் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்க வாய்ப்பே இல்லாததால், அந்த கட்சியை தேவையில்லாமல் விமர்சனம் செய்து எதற்காக அந்த கட்சிக்கு விளம்பரம் தேடிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அ.தி.மு.க.வை விஜய் விமர்சனம் செய்யவில்லை என தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

ஆட்சியில் நடக்கும் தவறுகளை கூட்டணி கட்சி என்ற ஒரே ஒரு காரணத்துக்காகவே விமர்சனம் செய்யாமல் இருக்கும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம், அ.தி.மு.க.வுடன் கூட்டணியே இல்லாத விஜய், அந்த கட்சியை விமர்சனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுவது கொஞ்சம்கூட நியாயமே இல்லை என்றும், அரசியல் அறம் இல்லாதவர்கள் தான் இந்த மாதிரியான கேள்வியை கேட்பார்கள் என்றும் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

எந்த கட்சியை விமர்சனம் செய்யவேண்டும், எந்த கட்சியை விமர்சனம் செய்யக்கூடாது என்பதை ஒரு கட்சியின் தலைவர் முடிவு செய்வார் என்றும், அவர் எங்கள் கட்சிக்கு ஹெட்மாஸ்டர் போன்றவர். அவருக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா?” என்ற கேள்வியையும் தொண்டர்கள் கேட்டு வருகின்றனர்.

மொத்தத்தில், “அ.தி.மு.க.வையும் விமர்சனம் செய்ய வேண்டும், நாம் தமிழர் கட்சியையும் விமர்சனம் செய்ய வேண்டும், மற்ற கட்சியையும் விமர்சனம் செய்ய வேண்டும்” என்று கூறுபவர்கள் அரசியல் தெளிவு இல்லாதவர்கள் என்றும், பொதுமக்கள் முதல் பத்திரிகைகள் வரை அனைவருமே ஆளும் கட்சியைத்தான் விமர்சனம் செய்வார்கள் என்றும், ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியில் உள்ளவர்களை யாராவது விமர்சனம் செய்வார்களா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

அ.தி.மு.க.வை அவர் விமர்சனம் செய்யவில்லை என்பது உண்மைதான். ஆனால், அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியையும் அவர் விமர்சனம் செய்யவில்லை. இது குறித்த கேள்வியை யாருமே கேட்கவில்லை. “ஏனென்றால் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வின் கூட்டணி கட்சியாக இருப்பதால் அந்த கட்சியை விமர்சனம் செய்யவில்லை என்ற கேள்வியை அவர்கள் எழுப்பவில்லை.

மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் அவர்கள்தானே? அப்படி என்றால் பா.ஜ.க.வை விமர்சனம் செய்வது போல் காங்கிரஸ் கட்சியை ஏன் விமர்சனங்கள் செய்யவில்லை என்ற கேள்வியையும் கேட்டிருக்க வேண்டும் அல்லவா?” என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் கூறி வருகின்றனர். இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அ.தி.மு.க.வை ஏன் விமர்சனம் செய்யவில்லை என்ற கேள்வியை கேட்பவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Tamilaga Vettri Kazhagam Supporters Respond to AIADMK Criticism: New Questions for DMK Pro-Critics!