நான் சொல்றதையும் செய்வேன்.. சொல்லாததையும் செய்வேன்.. தவெக + காங்கிரஸ் + விசிக.. இந்த 3 கட்சி கூட்டணி போதும்.. முடிவுக்கு வரும் திராவிட அரசியல்..

2026 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். தி.மு.க. கூட்டணியில்…

vijay rahul1 1

2026 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

தி.மு.க. கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக ஆகியவை இதே கூட்டணிகளை நீடிக்குமா அல்லது வெளியே போகுமா என்ற ஊசல் ஆட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மதிமுக கிட்டத்தட்ட வெளியே போய்விட்டதாகவும், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் சேர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பா.ம.க.வை பொறுத்தவரை, இரண்டாக பிரிந்தால் ஒரு பிரிவு அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியிலும், இன்னொரு பிரிவு தி.மு.க. கூட்டணியிலும் இணையும் என்று கூறப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வந்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, விஜய் கட்சியுடன் காங்கிரஸ் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், 50 முதல் 60 தொகுதிகளை கொடுத்தால் விஜய் கட்சியுடன் காங்கிரஸ் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில் இருந்து சென்று விட்டால், இடது மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணியில் இருந்து வெளியேறும் என்றும் கூறப்பட்டு வருகிறது. மொத்தத்தில், தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருப்பதால், எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இருக்கும், எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகும் என்பதை கணிக்க முடியாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில், நடுநிலை அரசியல்வாதிகள் கூறுவது என்னவென்றால், “ஒரே தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளையும் விஜய் வீழ்த்த வேண்டும் என்றால், ஒரு வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், அதிக கட்சிகளை சேர்க்கவில்லை என்றால் கூட காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய இரண்டு கட்சிகளை மட்டும் கூட்டணிகளில் சேர்த்தால் போதும், இந்த கூட்டணி ஒரே நேரத்தில் இரண்டு திராவிட கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பிவிடலாம்” என்றும் கூறி வருகின்றனர்.

“ஒரே ஒரு முறை ஆட்சி அமைத்து ஐந்து ஆண்டுகள் நல்லாட்சி கொடுத்து மக்களின் மனதை வென்று விட்டால், எம்.ஜி.ஆர். போல தொடர்ச்சியாக ஆட்சி அமைக்கலாம்” என்றும், “விஜய்க்கு 50 வயதுதான் ஆவதால் இன்னும் அவருக்கு நீண்ட எதிர்காலம் அரசியலில் இருக்கிறது” என்றும் கூறி வருகின்றனர்.

1996 ஆம் ஆண்டு ரஜினி மட்டும் அரசியல் கட்சி ஆரம்பித்து இருந்தால் இன்று வரை அவர் தான் ஆட்சி செய்திருப்பார். ஆனால், ஒரு நல்ல வாய்ப்பை அவர் மிஸ் செய்துவிட்டார். அதேபோன்ற ஒரு வாய்ப்பு தற்போது விஜய்க்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை விஜய் மிஸ் செய்யாமல் பயன்படுத்திக் கொண்டார் என்றால் தமிழக அரசியலில் ஒரு புதிய வரலாற்றை அவர் எழுதுவார்” என்றும் கூறி வருகின்றனர்.

மொத்தத்தில், தமிழக மக்களின் கடைசி நம்பிக்கை நட்சத்திரமாக விஜய் இருக்கிறார் என்றும், அவரது தலைமையிலான ஆட்சி அமைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

2026 Assembly Elections: Alliance Uncertainty Looms – A New Historic Opportunity for Vijay?