விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர அமித்ஷா நியமித்த நிபுணர்.. தப்பிக்கவே முடியாது.. நிச்சயம் வருவார்.. கோலாகல ஸ்ரீநிவாஸ்

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை 100% அல்ல, 1000% சதவீதம் உறுதியாக தெரிவிப்பதாக விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கூறி வரும் நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய்யை கொண்டு…

vijay amitshah

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை 100% அல்ல, 1000% சதவீதம் உறுதியாக தெரிவிப்பதாக விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கூறி வரும் நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய்யை கொண்டு வர ‘நிபுணர்’ ஒருவரை அமித்ஷா நியமித்துள்ளதாகவும், அந்த நிபுணர் கண்டிப்பாக விஜய்யை அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு கொண்டு வந்துவிடுவார் என்றும் அரசியல் விமர்சகர் கோலாகல ஸ்ரீநிவாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜ.க.வை தனது கொள்கை எதிரி என்றும், தி.மு.க.வைத் தனது அரசியல் எதிரி என்றும் கட்சி ஆரம்பித்த முதல் பொதுக்கூட்டத்திலேயே விஜய் தெரிவித்தார் என்பதும், எனவே பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை, தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை சமீபத்தில் கூட அவர் உறுதியாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய்யை கொண்டு வர பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு அளித்த பேட்டியில், அமித்ஷா “விஜய்யைக் கொண்டு வர முயற்சி செய்வோம்” என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் ஸ்ரீநிவாஸ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய்யை கொண்டு வர நிபுணர் ஒருவரை அமித்ஷா நியமித்துள்ளார் என்றும், அவர் கண்டிப்பாக விஜய்யை இந்த கூட்டணிக்குக் கொண்டு வந்துவிடுவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும்” தெரிவித்துள்ளார். அந்த நிபுணர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், அவர் மீது விஜய் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் என்றும் தெரிவித்தார். அதேபோல், அந்த நிபுணருக்கு எடப்பாடி பழனிசாமி இடமும் நெருக்கம் உண்டு என்றும், அமித்ஷாவுக்கு அவர் மிகவும் நெருக்கமானவர் என்றும், மூன்று தரப்புக்கும் நெருக்கமானவர் என்பதால் கண்டிப்பாக விஜய் இந்த கூட்டணிக்குள் அவர் கொண்டு வந்துவிடுவார் என்றும் கூறினார்.

ஆனால், அதே நேரத்தில், “அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய் வராமல் வெளியே இருந்தால் தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும்” என்பதையும் கோலாகல ஸ்ரீநிவாஸ் கூறினார். ஏனென்றால், “விஜய் தனித்து ஒரு கூட்டணி அமைத்தால், சிறுபான்மையினர் ஓட்டுக்களில் 50% வாக்குகளைப் பெறலாம். பா.ஜ.க. எதிர்ப்பு ஓட்டுக்களையும் 50% வாக்குகளை பெறலாம். அது போக, இளைஞர்கள் ஓட்டு, புதிய தலைமுறை ஓட்டு, பெண்கள் ஓட்டு, மற்ற கட்சிகளிடமிருந்து கவரப்படும் ஓட்டுகள் என அனைத்தும் விஜய்க்கு கிடைக்கும். ஒருவேளை அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு அவர் சென்றுவிட்டால், பா.ஜ.க. எதிர்ப்பு ஓட்டும் கிடைக்காது, சிறுபான்மையினர் ஓட்டும் கிடைக்காது. எனவே, அவர் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு வராமல் இருந்தால் தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும்” என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.