அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி பொருந்தாத கூட்டணி என்றும், தலைவர்கள் மட்டத்தில்தான் இக்கூட்டணி இணக்கம் கண்டுள்ளதே தவிர, தொண்டர்கள் இன்னும் பிரிவினையில்தான் இருக்கின்றனர் என்றும், இக்கூட்டணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றும் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் இருக்கும் தி.மு.க. அபிமானிகள் பல பேட்டிகளை யூடியூபில் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரத்தை வட இந்திய ஊடகங்கள் உற்று நோக்கியுள்ளதாக டெல்லி பத்திரிகையாளர் ராஜகோபாலன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வட இந்தியாவில் உள்ள முன்னணி ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தை கவர் செய்வதற்காக முக்கிய பத்திரிகையாளர்களுடன் கூடிய குழுக்களை அனுப்பி இருப்பதாகவும், கிட்டத்தட்ட தலைப்புச் செய்திகளில் வட இந்திய ஊடகங்களில் எடப்பாடி பழனிசாமியின் செய்திகள் வாசிக்கப்படுவதாகவும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் வட இந்திய ஊடகங்களில் அவரை ‘ஹீரோ’ ஆக்கி உள்ளதை அமித் ஷாவும் உற்று நோக்கியுள்ளதாகவும், இந்த கூட்டணி வெற்றிப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
அடுத்ததாக, விஜய்யை இந்த கூட்டணிக்கு இழுத்து, இந்த கூட்டணியை மாபெரும் வெற்றி கூட்டணியாக்கி, தி.மு.க. கூட்டணியை ஒன்றுமில்லாமல் செய்வதுதான் அமித்ஷாவின் இலக்கு என்றும், அதற்கான வேலைகளும் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பா.ஜ.க.வுடன் 100% அல்ல, 1000% கூட்டணி இல்லை என்று விஜய் உறுதிபட கூறியபோதிலும், விஜய்யை இந்த கூட்டணிக்கு இழுக்க அனைத்து முயற்சிகளும் அமித்ஷாவால் செய்யப்படும் என்றும் பத்திரிகையாளர் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர இருக்கும் நிலையில், அப்போது பா.ம.க. இரண்டாக உடைந்து, அதில் அன்புமணி தலைமையிலான பா.ம.க, பா.ஜ.க. கூட்டணியில் இணையும் என்றும், அவரது தலைமையிலான பா.ம.க. தான் உண்மையான பா.ம.க. என தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் என்றும், ராமதாஸ் நட்டாற்றில் விடப்படுவார் என்றும் கூறப்பட்டு வருகின்றன.
மொத்தத்தில், “தி.மு.க. கூட்டணிக்கு நிகரான வலுவான கூட்டணியாக அ.தி.மு.க. கூட்டணி இல்லை” என்று விமர்சனம் செய்தவர்கள் கூட, எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தை பார்த்து வாய் அடைத்துப் போய் இருப்பதாகவும், இந்த முறை போட்டி மிக வீரியமாக இருக்கும் என்றும் அரசியல் வியூக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
Edappadi Palaniswami’s Campaign Garners North Indian Media Attention: Is Vijay Amit Shah’s Next Target?
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
