என் கனவை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறேன்… இயக்குனர் ஷங்கர் பகிர்வு…

ஷங்கர் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் 1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்…

shankar

ஷங்கர் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் 1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஷங்கர்.

தொடர்ந்து இவர் இயக்கிய காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என 1990களின் இறுதியில் இவர் இயக்கிய அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இவரது படங்களில் தொழில்நுட்பம் போன்றவைகள் மிக பிரம்மாண்டமாக இருக்கும். அதனால் இவரை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் என்றே அழைத்தனர். 2000களின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி இயக்குனராக புகழ்பெற்ற இயக்குனராக இருந்து வந்தார் ஷங்கர். இவரது படங்களில் நடித்தாலே பெயர் வாங்கி விடலாம் என்று நடிகர்கள் இவர் படத்தில் விரும்பி நடித்தனர்.

தொடர்ந்து இவர் இயக்கிய அந்நியன், எந்திரன், நண்பன், எந்திரன் 2.0 போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றது. இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை இயக்கியிருக்கிறார் ஷங்கர். சமீபத்தில் இவர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் அடுத்ததாக இவர் வேள்பாரி என்ற நாவலை தழுவி படம் இயக்கப் போவதாக கூறியிருக்கிறார். அதைப்பற்றி அவரே ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.

சமீபத்தில் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளை கடந்து விற்பனையானதுக்கான வெற்றி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குனர் ஷங்கர் எந்திரன் திரைப்படம் எனது கனவாக இருந்தது நான் அதை செய்து முடித்து விட்டேன். அடுத்ததாக வேள்பாரியை படமாக எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருக்கிறது. அதை நோக்கி நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன். இந்த படத்தை உலகம் போற்றும் சிறப்பான படமாக பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எடுப்பேன் என்று கூறியிருக்கிறார் ஷங்கர்.