ஸ்காட்லாந்தில் இளம்பெண் ஒருவர் ஒரு இளைஞரை உயிருக்கு உயிராக காதலித்த நிலையில், அந்த இளைஞர் தனக்கு துரோகம் செய்வது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர் தனது காதலரை பிரிய முடிவு எடுத்த நிலையில், அடுத்த நாளே அவருக்கு அதிர்ஷ்டம் கொட்டியது என்ற தகவல் பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது வயதை ஒத்த இளைஞர் ஒருவரை உயிருக்கு உயிராகக்காதலித்தார். அந்த இளைஞரும் தன்னை உண்மையாக காதலிப்பதாக அவர் நம்பிக்கொண்டிருந்தார். ஆனால், அவரது காதலன் இதேபோன்று பல பெண்களுடன் உறவு வைத்திருப்பது ஒரு கட்டத்தில் தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களுடன் தனது காதலனிடம் கேள்விகள் கேட்க, அந்த காதலன் உண்மையை மறைத்து பொய் சொன்னதாக தெரிகிறது. இதனை அடுத்து இருவரும் பிரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள்.
ஆனால், காதலன் அந்த காதலியை விட மனமில்லை. அவருடைய பிறந்தநாளுக்கு ஒரு பரிசைக்கொண்டு வந்து கொடுத்தார். அந்த பரிசை பார்த்தவுடன் தனது காதலி மனம் மாறும் என்று நம்பிக்கை அவருக்கு இருந்தது. இந்த பிறந்தநாள் பரிசு பையில் சில பரிசுப் பொருட்களும், ஒரு லாட்டரி சீட்டும் இருந்தது. மறுநாள், அந்த லாட்டரி சீட்டுக்கு இந்திய மதிப்பில் ₹10 லட்சம் ரூபாய் விழுந்திருந்ததை கண்ட இளம்பெண் ஆச்சரியமடைந்தார்.
அவர் தனது சமூக வலைத்தளத்தில், “நான் பத்து லட்சம் ரூபாய் வென்றேன். இந்த உலகத்திலேயே நான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். எனது முன்னாள் காதலன் கொடுத்த லாட்டரி சீட்டுக்குத்தான் பரிசு விழுந்தது” என்று கூறினார். ஆனால், அதே நேரத்தில் அந்த காதலனைத் தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கப் போவதாகவும் கூறினார். அந்த பணத்தை வைத்து அவர் ஒரு புதிய வீட்டிற்கு முன்பணம் கொடுத்ததாகவும், விரைவில் அந்த வீட்டை தனது உழைப்பின் மூலம் விலைக்கு வாங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காதலனை பிரிந்த மறுநாளே அந்த இளம் பெண்ணுக்கு லாட்டரி சீட்டு விழுந்து மிகப்பெரிய வாழ்க்கை திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளதை பார்த்து அவரது நண்பர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
