விஜய்யை எல்லோரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள் அல்லது அவருடைய உண்மையான வாக்கு சதவீதம் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள் என்றும், விஜய் இந்த தேர்தலில் ஒரு மிகப்பெரிய மக்கள் சக்தியாக உருவாகி விடுவார்” என்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல்ஹாசன் தொடங்கினார். ஆனால், அந்த கட்சி எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், விஜய்யின் கட்சி அப்படி கிடையாது. அவர் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் அலற வைக்கிறார். திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளுக்கும் விஜய்யின் உண்மையான மதிப்பு எவ்வளவு என்பது நன்றாத் தெரியும். தனித்தனியாக கருத்துக்கணிப்புகளை எடுத்து வைத்திருக்கிறார்கள்.
“விஜய் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் ஓட்டையும் கபளீகரம் செய்கிறார். அவருடைய strategy ஒன்றுதான். தமிழ்நாட்டில் மொத்தம் கிட்டத்தட்ட 2 கோடி குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரே ஒரு ஓட்டு மட்டும் நாம் பெற்றுவிட்டால் போதும் என்றுதான் அவர் நினைக்கிறார். அதேபோல், ஒரு தெருவுக்கு இரண்டு கட்சியின் பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதில் நடந்துகொண்டுதான் வருகிறது. ஒரு குடும்பத்தில் இருந்து ஒரே ஒரு ஓட்டு பெறுவது என்பது விஜய் போன்ற பெரிய ஸ்டாருக்கு ஒரு பெரிய விஷயம் அல்ல. இது மட்டும் நிகழ்ந்துவிட்டால், அவர் கண்டிப்பாக ஆட்சி அமைப்பார்” என்று பெலிக்ஸ் ஜெரால்ட் தெரிவித்துள்ளார்.
“விஜய் பற்றி அதிகம் பேசி பெரிதுபடுத்த வேண்டாம் என்றுதான் அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், ஊடகங்கள் விஜய் பற்றி மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கின்றன. யூடியூப் சேனலில் ஒரு நாளைக்கு தமிழில் மட்டும் 500 வீடியோக்கள் பதிவானால், அது குறைந்தது 100 வீடியோக்கள் விஜய்யை பற்றித்தான் பதிவாகி வருகின்றன. எல்லா தேர்தல் வியூக வல்லுநர்களும், அரசியல் விமர்சகர்களும் விஜய் பற்றி பேசாமல் இருப்பதில்லை. எனவே, இன்றைய டிஜிட்டல் ஊடகங்கள் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன” என்றும் கூறப்பட்டு வருகிறது.
இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக விஜய்க்கு வாக்களிக்க வாய்ப்பு உண்டு என்று கூறப்பட்டாலும் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
