இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், 98 ரன்கள் அடித்திருந்த ஜோ ரூட், தனது சதத்தை எட்ட இரண்டாவது ரன் எடுக்க முயற்சித்தார். ஆனால், பந்தை கையில் வைத்திருந்த ஜடேஜா, “நூறாவது ரன்னுக்கு ஓடிவா” என சைகை செய்ய, ஜோ ரூட் பாதி தூரம் ஓடிவிட்டு, ரன் அவுட் ஆகும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்து மீண்டும் திரும்பி வந்துவிட்டார். அவர் திரும்பி வந்த காட்சியும், ஜடேஜா செய்த கிண்டலும் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால், தொடக்க ஆட்டக்காரர்களான சாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகிய இரண்டு விக்கெட்டுகளையும் நிதீஷ் குமார் வீழ்த்தினார். ஓலி போப் விக்கெட்டை ஜடேஜாவும், ஹாரி ப்ரூக் விக்கெட்டை பும்ராவும் வீழ்த்தினர். தற்போது ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று 83வது ஓவரில், அதாவது நேற்றைய போட்டியின் கடைசி ஓவரில் நான்காவது பந்தில் ரூட் பந்தை அடித்தார். அந்த பந்து எல்லைக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்ததால், இரண்டு ரன்கள் எளிதில் எடுத்து 98 ரன்களில் இருந்த ரூட் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு ரன் எடுத்து முடித்த நிலையிலேயே பந்து ஜடேஜாவின் கைக்கு வந்துவிட்டது. அவர் பந்தை கையில் வைத்துக்கொண்டு ஜோ ரூட்டிடம் “இன்னொரு ரன்னுக்கு ஓடு” என்று சைகை செய்ய, கிட்டத்தட்ட பாதி தூரம் ஓடிவிட்ட ஜோ ரூட், ஜடேஜாவின் சைகையை பார்த்ததும் ரன் அவுட் ஆக வாய்ப்பு இருக்கிறது என்பதைப்புரிந்துகொண்டு திரும்பி வந்துவிட்டார். அதை பார்த்து ஜடேஜா புன்னகை செய்ததும், ஜோ ரூட் திரும்பி புன்னகை செய்ததும் கொண்ட காட்சிகள் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
அதன் பிறகு இரண்டு பந்துகளை ஸ்டோக்ஸ் சந்தித்த நிலையில், அதில் ரன்கள் ஏதும் எடுக்காததால், ஜோ ரூட் 99 ரன்களில் ஆட்டமிழக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று போட்டியின் இரண்டாவது நாளில் ஜோ ரூட் சதம் அடிப்பாரா அல்லது விக்கெட்டை இழப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
https://x.com/StarSportsIndia/status/1943366402196504826
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
