திமுக எடுத்த சர்வேயில் விஜய்க்கு 20% ஓட்டு.. 2026ல் பிரச்சனையில்லை.. ஆனால் 2031ல் விஜய் vs உதயநிதி என வரும்போது சிக்கல்.. அதிர்ச்சியில் முக ஸ்டாலின்? மணி கருத்து

திமுக எடுத்த ரகசிய சர்வேயில் விஜய்க்கு 20% வாக்குகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தனக்கு தகவல் வந்ததாகவும், பிரஷாந்த் கிஷோர் சொன்னது உண்மை, விஜய்க்கு 15 முதல் 20 சதவீதம் கிடைக்கும் என்று…

vijay vs udhayanidhi

திமுக எடுத்த ரகசிய சர்வேயில் விஜய்க்கு 20% வாக்குகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தனக்கு தகவல் வந்ததாகவும், பிரஷாந்த் கிஷோர் சொன்னது உண்மை, விஜய்க்கு 15 முதல் 20 சதவீதம் கிடைக்கும் என்று சொன்னதை தான் இப்போது ஒப்புக்கொள்வதாகவும், விஜய்க்கு கண்டிப்பாக 20% ஓட்டு கிடைக்கும் என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் இப்போது தன்னை முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுத்திக் கொண்டார். கூட்டணி முடிவை விஜய்தான் முடிவு செய்வார் என்றும் அவரது கட்சியின் தீர்மானத்தில் போடப்பட்டுள்ளது. எனவே, விஜய் மனம் மாறி பாஜக இல்லாத அதிமுகவில் கூட்டணி சேர்ந்தால் கண்டிப்பாக ஆட்சி பிடிக்கலாம். ஆனால், அதற்கு பாஜகவை அதிமுக கழற்றி விட வேண்டும். எடப்பாடி பழனிசாமி கைகளில் தான் முடிவு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமிக்கும் விய்ஜயுடன் சேர்ந்தால் மட்டுமே ஆட்சியை பிடிக்கும் என்பது நன்றாக தெரியும். எனவே, அடுத்து வரும் எட்டு மாதங்களில் என்னென்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் மூன்று அணிகளால் வாக்குகள் பிரிக்கப்படுவதால், மீண்டும் திமுகவை ஆட்சியில் உட்காரவைக்கும் பணியைத்தான் செய்யப் போகிறார்கள் என்று கூறிய பத்திரிகையாளர் மணி, 1989 ஆம் ஆண்டு அதிமுக இரண்டாகப் பிரிந்து, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் திமுக ஆட்சிக்கு வந்தது போல் வரலாறு மீண்டும் திரும்புகிறது என்றும், திமுகவுக்கு எதிரான வாக்குகள் மூன்று பிரிவாக செல்வதால் மீண்டும் திமுகவை ஆட்சியில் உட்கார வைக்கும் புண்ணியத்தை மூவரும் செய்ய போகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

ஆனால், அதே நேரத்தில் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளும் அரசியல் விமர்சகர்கள், 2026ல் வேண்டுமானால் திமுகவின் எதிர்ப்பு ஓட்டு பிரிவதால் திமுக வெற்றி பெற்று விடலாம், ஆனால் 2031இல் திமுகவா, தமிழக வெற்றிக் கழகமா என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்றும், குறிப்பாக உதயநிதியா? விஜய்யா? என்ற நேருக்கு நேர் மோதல் ஏற்படும் என்றும், அப்போது மிக எளிதில் விஜய் வெற்றி பெற்று முதல்வராகி விடுவார் என்றும் கூறி வருகின்றனர்.

பத்திரிகையாளர் மணி சொல்வது போல் திமுக எதிர்ப்பு ஓட்டு பிரிவதால் திமுக வெற்றி பெற்றுவிடுமா? அதேபோல் அரசியல் விமர்சகர்கள் சொல்வது போல் 2031 இல் உதயநிதி – விஜய் மோதலால் சிக்கல் ஏற்படுமா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.