பொதுவாக ஒருவரை பார்த்து ‘உனக்கு மூளையில் ஒன்னுமே இல்லையா? என திட்டுவதுண்டு, ஆனால் பிரெஞ்ச் நபர் ஒருவரின் மூளை 90% காலியாக இருந்ததை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
பிரெஞ்ச் நபர் ஒருவருக்கு மூளையில் 90% இல்லை என்பது ஸ்கேன் மூலம் தெரியவந்து மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணம் அவருக்கு ஹைட்ரோகெஃபாலஸ் எனப்படும் அரிய நோய் இருப்பதால் தான் என்றும், இருப்பினும், அவர் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், வேலை செய்து, குடும்பத்தை பராமரித்து வருகிறார், எந்த ஒரு மனநல பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார் என்பது ஆச்சரியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நபரை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன் அவருக்கு மூளையில் பாதித்த ஹைட்ரோகெஃபாலஸ் என்றால் என்ன? என்பதை தற்போது பார்ப்போம்,. ‘காலியான மூளை’ என்பது ஒரு சாதாரண மக்களின் சொல் என்றும், இது விஞ்ஞான ரீதியாக சரியல்ல. சி.டி. ஸ்கேனில் காலியான இடம் அல்ல, தண்ணீர் தான் தெரிகிறது. இந்த பெருமூளை திரவம் உடல் செயல்பாடுகளுக்கும், மூளையை சுத்தம் செய்வதற்கும், மூளையின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் கழிவுகளை அகற்றுவதற்கும் மிக முக்கியமானது. இந்த திரவம் மூளை உறுப்புகளை சுற்றி சுழற்சி செய்கிறது. தினசரி உற்பத்தியாகி, மூளை மற்றும் முதுகெலும்பைத் தூய்மைப்படுத்த வென்ட்ரிக்கிள்கள் வழியாக பயணிக்கிறது. அதிகப்படியான திரவம் குவியும்போது, அது ஹைட்ரோகெஃபாலஸுக்கு வழிவகுக்கிறது. இது சி.டி. ஸ்கேன்களில் கருமையான பகுதியாக தோன்றும். இந்த பகுதி காலியாக இருக்காது, திரவத்தால் கண்டிப்பாக நிரம்பியிருக்கும். ஆனால் ஹைட்ரோகெஃபாலஸ் பாதித்தவர்களுக்கு இந்த திரவம் குறைவாக இருக்கும். இதனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனநிலை சரியில்லாமல் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த பிரெஞ்ச் நபருக்கு மூளையில் உள்ள திரவம் 90% இல்லை என்றாலும் அவர் இயல்பாக இருப்பது தான் ஆச்சரியம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூளை கிட்டத்தட்ட காலியாக இருந்தாலும் அவர் மற்றவர்களை போல இயல்பாக பேசுகிறார், சிரிக்கிறார், சாப்பிடுகிறார், குடும்பத்துடன் சந்தோஷமாக பொழுதை கழிக்கிறார், இது உண்மையில் மெடிக்கல் மிராக்கிள் என்று மருத்துவ உலகம் கூறுகின்றன
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
