தளபதி விஜய்க்கு ஆட்சி மாற்றம் மட்டும் முக்கிய காரணம் அல்ல, இந்த அரசியல் சிஸ்டத்தையே மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார். ரஜினி, சீமான் ஆகியோர் அதைத்தான் சொன்னார்கள், ஆனால் அவர்களால் எதிர்பாராத காரணத்தினால் முடியவில்லை. ஆனால், தளபதி விஜய் அந்த சிஸ்டத்தை மாற்றுவார்” என்று தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளர் ஆனந்த்ஜி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பதை தவிர்த்து, அரசியல் மாற்றம் என்ற ஒரு தேவை உள்ளது. இதைத்தான் ரஜினிகாந்த், சீமான் ஆகியோர் சொன்னார்கள். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்களால் அதை செய்ய முடியாமல் போய்விட்டது. “அரசியல் மாற்றம் என்பது மொத்தமாக சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்பதுதான்” என்று ஆனந்த்ஜி வலியுறுத்தினார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, “திமுக ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்கிறார்கள். அதன் பின் அதிமுக ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்கிறார்கள். இரண்டுமே எதிரெதிர் கட்சிகளாக இருந்தாலும், கொள்ளை அடிப்பதில் இரண்டுமே ஒரே வேலையைத்தான் செய்து வருகின்றன. இதை நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தளபதி விஜய் ஆட்சிக்கு வர இருக்கிறார். மொத்தமாக சிஸ்டத்தை மாற்றுவார்” என்று ஆனந்த் ஜி தெரிவித்தார்.
“அடிப்படையில் சிஸ்டத்தை மாற்ற வேண்டும். சிஸ்டம் என்பது என்னவென்றால், திமுக ஆட்சி வந்தால் திமுக காரர்களுக்குத்தான் காண்ட்ராக்ட் கிடைக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக காரர்களுக்குத்தான் காண்ட்ராக்ட் கிடைக்கும். அந்த கான்ட்ராக்ட் மூலம் கிடைக்கும் பணத்தில் கமிஷன் கொடுக்க வேண்டும், கட்டிங் கொடுக்க வேண்டும் என்றுதான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிஸ்டம் கெட்டு போயுள்ளது. அந்த சிஸ்டத்தை முதலில் மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது என்பது தமிழக அரசியலில் வரலாறு என்று எல்லோரும் பார்க்கிறீர்கள். கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியும் என்பதை விஜய் முதல் முதலாக நிரூபிப்பார்” என்று ஆனந்த்ஜி கூறினார். ஏற்கனவே கூட்டணி இல்லாமல் ஜெயலலிதா ஜெயித்துள்ளார். “ஒரு காரை ஓட்டும்போது காருக்கு முன்னால் என்ன வண்டி ஓடுகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். பின்னாடி இருக்கும் வண்டிகளை பார்க்கக் கூடாது. எனவே, இதுவரை நடந்த வரலாறை பார்க்காமல், இனிமேல் என்ன நடக்கப் போகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தமிழக அரசியல்வாதிகளை பொறுத்தவரை, ஜாதி, மதம் என பிரித்து அரசியல் செய்து வருகிறார்கள். எந்த தொகுதியில் எந்த ஜாதிக்காரன் வேண்டும், எந்தத் தொகுதியில் எந்த மதத்தில் இருந்து வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று 50 ஆண்டுகளாக ஜாதி, மத அரசியல் செய்ததால் தான் இப்போது அந்தந்த ஜாதிக்கு ஒரு கட்சி, அந்தந்த மதத்திற்கு ஒரு கட்சி என தோன்றி, கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எந்த அரசியல்வாதி ஜாதி, மத அரசியல் செய்தார்களோ, இப்போது அவர்களுக்கு அது பிரச்சினையாக வந்துள்ளது. ஆனால், விஜய்க்கு ஜாதி, மத அடையாளம் கிடையாது. ஒரு பொது நபராக அவர் களத்தில் இறங்குகிறார். எனவே, அவருக்கு எல்லா ஜாதி மக்களும், எல்லா மத மக்களும் ஆதரவு தருவார்கள்” என்று ஆனந்த்ஜி மற்றொரு கேள்விக்குப் பதிலளித்தார்.
“மொத்தத்தில் ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு கட்சி என்ற அடையாளம் இல்லாமல், மக்களுக்காக சேவை செய்ய வருகிறார். பல கோடி வருமானத்தை விட்டுவிட்டு வருகிறார் என்ற பொதுவான கருத்துதான் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவேதான் அவருக்கு எல்லா கட்சியினர், எல்லா ஜாதியினர், எல்லா மதத்தினரும் வாக்களிக்க முன்வருகிறார்கள்” என்று ஆனந்த் ஜி நம்பிக்கை தெரிவித்தார். “கண்டிப்பாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் விஜய்யுடன் கூட்டணி சேருவார்கள் என்றும், 2026ல் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அரசு அமையும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
