ஆப்பிளின் அடுத்த வரவிருக்கும் இயங்குதளமான iOS 26, அதன் வீடியோ அழைப்பு செயலியான FaceTime-ல் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி இனிமேல் ஆப்பிள் பயனர் ஒருவர் FaceTime-ல் நிர்வாண அல்லது ஒருவர் ஆடையை அகற்ற தொடங்கினால் அது தானாகவே வீடியோ மற்றும் ஆடியோவை நிறுத்திவிடும். இந்த புதிய அம்சத்தின் ஒரு பகுதியாக, பயனர்கள் திரையை ஒரு முறை தொடுவதன் மூலம் மீண்டும் வீடியோ மற்றும் ஆடியோவை தொடங்க வாய்ப்பு வழங்கப்படும். சமூக ஊடகங்களில் பலர் இந்த அம்சத்தால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஒரு ரெடிட் பயனர், “நீண்ட தூர உறவுகளில் இருப்பவர்களுக்கு இது பெரும் குழப்பம்” என்று பதிவிட, மற்றொருவர், “ஐயோ, என் எல்லா அழைப்புகளும் உடை அவிழ்ப்பதில்தான் முடிவடைகின்றன!” என்று வேடிக்கையாக குறிப்பிட்டார். வேறொருவர் நகைச்சுவையாக, “வேலையை சீக்கிரம் முடிக்க இது ஒரு சிறந்த வழி!” என்று பதிவிட்டார்.
ஸ்கிரீன்ஷாட்கள் காட்டுவது போல, FaceTime ஒருவர் ஆடையை அகற்றுவதை கண்டறியும் போது, அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை காட்டும். “நீங்கள் உணர்ச்சிகரமான ஒன்றை காட்டுவதால் ஆடியோ மற்றும் வீடியோ இடைநிறுத்தப்பட்டுள்ளன” என்று அந்த செய்தி கூறும். மேலும், “நீங்கள் சங்கடமாக உணர்ந்தால், அழைப்பை துண்டிக்கலாம்” என்றும் அதில் தொடரும். பின்னர் பயனர்களுக்கு “ஆடியோ மற்றும் வீடியோவை தொடங்கு” அல்லது “அழைப்பை முடி” என இரண்டு விருப்பங்களை அது வழங்கும்.
ஆப்பிள் கடந்த மாதம் iOS 26-ஐ அறிவித்தபோது, “கமயூனிகேஷன் சேஃப்டி” (Communication Safety) என்று அழைக்கப்படும் இந்த அம்சத்தை ஒரு வலைப்பதிவில் விரிவாக விளக்கியது. “FaceTime வீடியோ அழைப்புகளில் நிர்வாணம் கண்டறியப்படும்போது தலையிடவும், புகைப்படங்களில் உள்ள பகிரப்பட்ட ஆல்பங்களில் (Shared Albums) நிர்வாணத்தை மங்கலாக்கவும் செய்யும்என்று ஆப்பிள் கூறியது.
முதலில் இந்த அம்சம் குழந்தை கணக்குகளுக்கு மட்டுமே என்றும், சிறார்களை பாதுகாக்க இந்த அம்சம் உதவும் என்றும் பரவலாக புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது, இரண்டு பெரியவர்கள் வீடியோ அரட்டையில் ஈடுபடும்போதும் இந்த அம்சம் செயல்படுகிறது என்று கூறப்படுகிறது.
எனினும், ஆப்பிள் ஒரு முக்கிய விஷயத்தை வலியுறுத்துகிறது: அது “FaceTime அழைப்புகளின் உள்ளடக்கத்தை கிளவுடில் ஒருபோதும் சேமிப்பதில்லை”. எனவே, ஆப்பிள் ஊழியர்கள் தங்களை கண்காணிக்கிறார்கள் என்று மக்கள் கவலைப்பட தேவையில்லை. மாறாக, நிர்வாணம் என்பதை இயந்திர கற்றல் (machine learning) மூலம் கண்டறியப்படுகிறது. இது ஒரு வகை செயற்கை நுண்ணறிவு என்று விளக்கம் அளித்துள்ளது.
அதாவது புகைப்படம் மற்றும் வீடியோ இணைப்புகளை பகுப்பாய்வு செய்யவும், ஒரு புகைப்படம் அல்லது வீடியோவில் நிர்வாணம் உள்ளதா என்பதை கண்டறியவும் சாதனத்திலேயே இயங்கும் இயந்திர கற்றலை (on-device machine learning) பயன்படுத்துகிறது.”
இந்த அம்சம் iOS 26-இன் ஒரு பகுதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, பெரும்பாலான பயனர்களிடம் இது இன்னும் இல்லை.
கடந்த மாதம் மிகுந்த ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்ட iOS 26, தற்போது “பீட்டா சோதனையின்” ஒரு பகுதியாக கிடைக்கிறது. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலரே இதை பயன்படுத்தி, பொது வெளியீட்டிற்கு முன் ஏதேனும் பிழைகள் அல்லது சிக்கல்களை கண்டறிவார்கள்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
