சிங்கம் சிங்கிளா வருது.. அதிமுக – பாஜக கூட்டணி ஒரு மேட்டரே இல்லை.. திமுகவுக்கு சிம்மசொப்பனம் விஜய் தான்.. பாமக, தேமுதிக வந்தாலும் வேஸ்ட் தான்..!

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியால் தங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும், விஜய் மட்டுமே சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்றும் தி.மு.க.வில் உள்ள மேல்மட்ட தலைவர்கள் யோசிப்பதாக கூறப்படுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…

vijay vs stalin

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியால் தங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும், விஜய் மட்டுமே சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்றும் தி.மு.க.வில் உள்ள மேல்மட்ட தலைவர்கள் யோசிப்பதாக கூறப்படுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி என்பது தலைவர்கள் மட்டத்தில் மட்டுமே ஏற்பட்டது என்றும், இரு கட்சிகளின் தொண்டர்கள் இன்னும் இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மீண்டும் பா.ஜ.க. தொண்டர்களுடன் இணைந்து வேலை செய்வதை விரும்பவில்லை என்றும், அப்படியே கூட்டணி இருந்தாலும் பா.ஜ.க. நிற்கும் தொகுதிகளில் உள்ள அ.தி.மு.க.வினர் வேலை செய்ய மாட்டார்கள், ஓட்டு போட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை தி.மு.க. பெரிதுபடுத்தவில்லை; அந்த கூட்டணி எப்படியும் படுதோல்வியடையும் என்று நம்புகிறது.

ஆனால், அதே நேரத்தில் தனக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது விஜய் தான் என்று தி.மு.க. கணிசமாக நம்புகிறது. குறிப்பாக, பா.ம.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியில் உள்ள தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், எனவே ஒட்டுமொத்தமாக அந்த வாக்குகள் விஜய்க்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் கட்சியின் சில ஓட்டுகள் விஜய்க்கு செல்வதாகவும், இளைய தலைமுறை வாக்காளர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள், பெண்கள் வாக்காளர்கள் ஆகியோரின் வாக்குகளும் விஜய்க்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.

எனவே, வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. மற்றும் விஜய் கட்சி இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்றும், இன்னும் சொல்லப்போனால் “விஜய்யா? உதயநிதியா?” என்ற கேள்விதான் மக்கள் முன்னிலையில் இருக்கும் என்றும், அப்போது விஜய்க்குத்தான் அதிக பாசிட்டிவ் அலை இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், முதல் முறையாக திராவிட கட்சிகளை விரட்டி அடிக்கும் ஒரு சக்தியாக விஜய் தோன்றுவாரா? அல்லது சிவாஜி கணேசன் முதல் கமல்ஹாசன் வரை கட்சி ஆரம்பித்து ‘செல்லாக் காசுகள்’ போல் விஜய் மாறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.