ஆஸ்திரேலியாவை அதிரவைத்து உலக அளவில் பரபரப்பான ஒரு திகிலூட்டும் வழக்கில், 12 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு, 50 வயதுடைய எரின் பேட்டர்சன் என்பவரை மூன்று கொலை குற்றச்சாட்டுகளிலும், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டிலும் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. அவரது வீட்டில் பரிமாறப்பட்ட ஒரு கொடிய உணவே இந்த மரணங்களுக்கு காரணம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட்டர்சன் கருத்துவேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்திருந்த நிலையில், திடீரென கணவரின் பெற்றோர்களையும், அவரது அத்தை மற்றும் மாமாவையும் மதிய உணவிற்கு அழைத்திருந்தார். ஆனால் கணவர் மட்டும் பேட்டர்சன் விருந்துக்கு வர மறுத்துவிட்டார். கள்ளம் கபடம் இல்லாமல் பேட்டர்சன் கணவரின் பெற்றோர் மற்றும் அத்தை, மாமா விருந்துக்கு வந்திருந்தனர். விருந்தினர்களுக்கு பேட்டர்சன் வழக்கமாக காளான்கள், மாட்டிறைச்சி என வகை வகையாக பரிமாறினார்.
ஆனால் விருந்துக்கு அடுத்த நாள், நான்கு பேர்களும் கடுமையான இரைப்பை குடல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் ஒரே ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்.
இதையடுத்து விருந்து வைத்த பேட்டர்சன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் நடந்ததை மாற்றி மாற்றி கூறினார். முதலில், அவர் காளான் கொடுக்கவில்லை என்றும் ஆனால் பின்னர் காளான் கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டார். ஆனால் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் தான் ‘டெத் கேப்’ காளான்கள் கொடுத்ததை அவர் மருத்துவர்களிடம் கூறவில்லை.
அதுமட்டுமின்றி விசாரணையின் போது, பேட்டர்சன் தனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறினார். ஆனால் அதன்பின் தனக்கு புற்றுநோய் இல்லை என்றும், தான் பொய் சொன்னதை ஒப்புக்கொண்டார். விசாரணையாளர்களை தவறாக வழிநடத்தவும், தனது தடயங்களை மறைக்கவும், விசாரணையின்போது தனது செல்போனை factory reset செய்ததையும் பின்னர் ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் நடந்த நிலையில் அவர் குற்றவாளி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். எரின் பேட்டர்சன் தற்போது ஆயுள் சிறைத் தண்டனையை அனுபவித்து வந்தாலும் அவரது முழு தண்டனையை நீதிபதிகள் இன்னும் வெளியிடவில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
