நம் முன்னோர்கள் எது செய்தாலும் அதில் உடல் ஆரோக்கியத்தினை முன்னிறுத்தியே இருக்கும். அதன்படி எந்த திசையில், எந்த நேரத்தில், எதில் படுத்து உறங்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கின்றனர். படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை “மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது. அவற்றை படித்து பலன் பெறுவோம்.
கம்பளிப் படுக்கை – குளிருக்கு இதமாய் இருக்கும். குளிர் ஜுரத்தினை போக்கும்.
கோரைப்பாய் – உடல் சூடு, மந்தம், ஜுரம் போகும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் கொடுக்கும்.
பிரம்பு பாய் – சீதபேதி, சீதளத்தால் வரும் ஜுரம் நீங்கும்.
ஈச்சம்பாய் – வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.
மூங்கில் பாய் – உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
தாழம்பாய் – வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீக்கும்.
பேரீச்சம்பாய் – வாதகுன்மநோய், சோகை நீக்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணத்தினை தரும்.
இலவம்பஞ்சு படுக்கை – உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.
இரத்தினக் கம்பளம் – நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.
ஆனால் இப்பலாம் பயன்படுத்த எளிது என போம் மெத்தைகளும், பிளாஸ்டிக் பாய்களையும் பயன்படுத்துகின்றோம். பலவித நோய்களுக்கு ஆளாகி அல்லல்படுகின்றோம். உழைத்து களைத்து, வியர்வை சிந்தி உழைத்து களைத்து வெறும் தரையில் துண்டினை விரித்து கையை தலைக்கு கொடுத்து உறங்கினால் உடலுக்கும் நல்லது. சமுதாயத்துக்கும் நல்லது.