தாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா?!

By Staff

Published:


3e53d6c9baa748cfe05231df6ad67bb5

திருமணத்தின் ஒவ்வொரு சடங்கிலும் ஒவ்வொரு அர்த்தமிருக்கு. மாங்கல்ய தாரணத்தின்போது விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளை இந்த 3 முடிச்சுகள் குறிக்கும். இந்த மூன்று நிலையிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மை மிக்கவளாக திகழ வேண்டும். தெய்வ பக்தி, குடும்ப பெரியவர்களிடம் மதிப்பு, கணவரிடம் அன்பு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இப்படி மூன்று முடிச்சுக்களுக்கான காரண முடிச்சுகள் உள்ளன.

இறைவன், தேவர்கள் மற்றும் விண்ணவர்களின் சாட்சியாக போடப்படுவது முதல் முடிச்சு. முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சு. பெற்றோர்கள், திருமணத்திற்கு வருகை தந்தவர்களின் சாட்சியாக கட்டப்படுவது மூன்றாம் முடிச்சு.

அர்த்தம் புரிந்து திருமண சடங்கினை செய்வோம்! சடங்கின் தாத்பரியம் புரிந்து செய்த திருமணத்தை மதித்து நடப்போம்!

Leave a Comment