ஏன் கோவில் கோபுரத்தைவிட உயரமான கட்டிடம் இருக்கக்கூடாது?!

By Staff

Published:


e2ccb490e0f866b6742e0f9587badfc5

முன்பெல்லாம் கோவில் கோபுரத்தைவிட அந்த ஊரில் எந்த உயர்ந்த கட்டிடங்களும் இருக்கக்கூடாதென்பது நியதி. இதுக்கு அரண்மனைகளும், கோட்டை, கொத்தளங்களும் பொருந்தும். அப்படி சொல்ல என்ன காரணம் என தெரிந்துக்கொள்ளலாமா?!

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு, பித்தளை, ஈயம் எனப்படும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களினுள்
நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள்
தானியங்கள் கொட்டப்படும். குறிப்பாக வரகு அதிகமாய் கொட்டுவர். இந்த தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பதாக இப்போதைய அறிவியல் கூறுகிறது.

03bd924cefab8425eec01ec15b2197f4

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. இதன் காரணம் , கலசத்தினுள் நிரப்பப்படும் அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!

இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே! ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் ‘எர்த்’ ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்குதான்.இதற்காகத்தான் கோபுரத்தைவிட எந்த கட்டிடமும் உயரமாய் இருத்தல் கூடாதுன்னு நியதி வகுத்திருந்தனர்.

அதனால்தானோ என்னமோ “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்”என்ற பழமொழியும் உண்டானது!!

Leave a Comment