தழுவிடும் போதிலே இடம் மாறும் இதயமே’ என்று ஒரு கவிஞர் கட்டிப்பிடித்தல் குறித்து அனுபவித்து கூறிய நிலையில், கட்டி பிடிப்பது என்பது அன்பை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சிகரமான விஷயம் என்றும், எனவே அடிக்கடி நேரம் கிடைக்கும்போதெல்லாம் கட்டிப்பிடியுங்கள் என்றும் ஒரு வாலிபர் தனது மனைவியை கடைசியாக கட்டி பிடித்ததை நினைவூட்டியுள்ளார்.
அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பெரும் உணர்ச்சி மயமாக உள்ளது. டில்லியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மனைவியை கடைசியாக கட்டிப்பிடித்ததை நினைவுகூர்ந்து, அவர் செய்த பதிவு பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்து உள்ளது.
பிரதாப் சுதான் என்ற விளம்பரத்துறை நிபுணர், தனது பக்கத்தில் இவ்வாறு எழுதி உள்ளார்: “எனது மனைவி உடல்நிலை சரியில்லாத போது, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக தயாராக இருந்தேன். அப்போது அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும்; மீண்டும் நீ இந்த வீட்டிற்கு வந்து வாழ வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் நான் அவரை கட்டிப்பிடித்தேன்.
ஆனால், அவருக்கு தான் இனிமேல் உயிரோடு இருக்க மாட்டேன் என்று தெரிந்து இருக்கும் போல, அதனால் அவர் என்னை வித்தியாசமான முறையில் கட்டிப்பிடித்தார். அந்த காலையில் நிகழ்ந்த அந்த கட்டிப்பிடிப்பு, அவர் தன் அன்பை மட்டும் வெளிப்படுத்தாமல் எனக்கு வேறு ஏதோ சொல்ல வந்தது. நான் அப்போது புரிந்து கொள்ளவில்லை, ஆனால் இப்போது புரிந்து கொண்டிருக்கிறேன். நான் திரும்ப வரமாட்டோம் என்று நினைத்துதான் அவர் அந்த அமைதியான, ஈரமான கட்டிப்பிடிப்பை என்னிடம் செலுத்தினார்.”
தற்போது அவர் உயிருடன் இல்லை. ஆனால், அவர் கடைசியாக செய்த அந்த கட்டிப்பிடிப்பை எதனுடனும் ஒப்பிட முடியாது. எனவே, உங்கள் இணையுடன் அடிக்கடி நேரம் கிடைக்கும்போது எல்லாம் கட்டிப்பிடியுங்கள். ஏனெனில் வாழ்க்கை என்பது நிரந்தரமானது இல்லை. எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று தெரிவித்தார்.
இந்த பதிவுக்கு பலர் தங்களது உணர்ச்சிமயமான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ஒரு தந்தை தான் தனது குழந்தைகளை கடைசியாக கட்டிப் பிடித்து பதிவு செய்திருந்தார். போருக்கு செல்லும் தனது மகனை கடைசியாக கட்டிப்பிடித்ததாகவும், தனது மகன் திரும்பவே இல்லை என்றும் ஒரு தாய் குறிப்பிட்டார்.
இதேபோல பலரும் கண்ணீரை வரவழைக்கும் உணர்ச்சிமயமான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
