காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது பலராலும் இயலாத காரியமாக போய்விட்டது. ஒரு காலத்தில் அனைவரும் காலையில் எழுந்தனர் சீக்கிரமே தூங்கினர். இப்போது அதிகாலையில் எழுவது எல்லோருக்கும் எட்டாக்கனியாகி விட்டது.
வாழ்க்கை முறைகள் மாறி விட்டது ஒரு புறம் இருந்தாலும் என்றைக்காவது ஒருநாள் அவசர சூழ்நிலை காரணமாக அதிகாலையில் எழுவோம் குளிப்போம் அப்போது மனது புத்துணர்ச்சியாக இருக்கும்.
இது போல தினமும் செய்தால் என்ன என நினைப்போம் ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. காலையில் சோம்பல் நம்மை எழ செய்துவிடாமல் செய்து விடும்.
காலை சீக்கிரம் எழ இந்த பயிற்சியாளர் தரும் அட்வைஸ்கள் என்ன கொஞ்சம் கேட்டு பார்ப்போம்.