ரொனால்டினோவிடம் ஆசி பெற்ற அஜித் மகன்.. வாழ்நாள் சந்தோஷம் அடைந்த ஆத்விக்..!

  உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோவிடம் அஜித் மகன் ஆத்விக் ஆசி பெற்ற வீடியோ வைரலாகி வருகிறாது. சென்னையில் நேற்று பிரேசில் மற்றும் இந்தியா கால்பந்து அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.…

ronaldo

 

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோவிடம் அஜித் மகன் ஆத்விக் ஆசி பெற்ற வீடியோ வைரலாகி வருகிறாது.

சென்னையில் நேற்று பிரேசில் மற்றும் இந்தியா கால்பந்து அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பிரேசில் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்காக வந்திருந்த பிரபல நட்சத்திர வீரர்களில் ஒருவராக இருந்த ரொனால்டோவை, நடிகர் அஜித்தின் மகன் ஆத்வி சந்தித்த போது, அவரை ஊக்கப்படுத்தி, தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டியை காண ஏராளமான கால்பந்து ரசிகர்கள் திரண்டிருந்தனர். கால்பந்து மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித்தின் மகனும் தனது அம்மா ஷாலினியுடன் இந்த போட்டியை காண வந்திருந்தார். தீவிர கால்பந்து ரசிகராக இருக்கும் ஆத்விக், ரொனால்டோவை சந்திக்க எதிர்பார்த்திருந்த நிலையில் தான் அந்த அதிசயம் நடந்தது.

ரொனால்டோ, ஆத்விக்கின் தலையை தடவி ஆசீர்வதித்தது ஆத்விக், அவருடைய அம்மா ஷாலினியை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், “வாழ்நாள் பலனை அடைந்ததாக” ஆத்விக் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என கூறப்படுகிறது.

அஜித் மகன் ஏற்கனவே பள்ளி அளவிலான கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு, சில பரிசுகளையும் வென்றுள்ளார். மேலும், எதிர்காலத்தில் ஒரு சிறந்த கால்பந்து வீரராக வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார். இந்நிலையில், ரொனால்டோவை நேரில் சந்தித்து ஆசி பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரொனால்டோ போலவே, அஜித் மகன் ஆத்விக்கும் உலகப் புகழ் பெற்ற ஒரு சிறந்த கால்பந்து வீரராக வருவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!