மக்கள் செல்வன் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் டிரெய்ன் படத்தில் நடித்து வருகிறார். மக்கள் செல்வனைப் பொருத்தவரை அவர் ஒரு யதார்த்தமான நடிகர். அவரைப் பார்க்கும் ரசிகர்கள் இவர் தன்னைப் போலவே இருக்கிறாரே என்று நினைப்பதுண்டு. சராசரி இளைஞனாக இருக்கிறார். அதனால்தான் ரசிகர்கள் அவர்களை மக்கள் செல்வனாகக் கொண்டாடுகிறார்கள்.
இவர் நடிப்பில் வெளியான மகாராஜா படம் சக்கை போடு போட்டது. சீனாவிலும் இந்தப் படம் இப்படி எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது ஆச்சரியமாகவே உள்ளது. அந்த வகையில் இவர் நடிப்பு மெருகேறியுள்ளது. இவர் படங்களைத் தேர்வு செய்த விதமும் இவரது படத்தின் வெற்றிக்கு பிளஸ் பாயிண்ட்.
அவர் சினிமாவில் மட்டும் அல்லாமல் சின்னத்திரையிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் கலக்கிவிட்டார். இப்போது பணத்தைப் பற்றி ஒரு தத்துவத்தை உதிர்த்துள்ளார். எல்லாம் பிக்பாஸ் அனுபவம்தான் போல. வாங்க என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.
பணம் என்பது ஒரு பவர். அது நம் கடைசி காலம் வரை தேவை. பணம் இல்லாத போது, இருந்தா நிம்மதியா இருக்கலாமேன்னு தோணும். நிறைய சம்பாதிச்சதுக்கு அப்புறம் பணத்தால நிம்மதி இல்லன்னு தோணும். பணத்தை சம்பாதிச்சிட்டு அது ஒர்த் இல்லன்னு சொல்லலாம். ஆனா பணம் இல்லாம அதை சொல்லக்கூடாது என்று தத்துவம் சொல்கிறார் விஜய் சேதுபதி. பணத்தைப் பற்றி இந்த அளவுக்கு யாருமே சொன்னது இல்லப்பா… எல்லாமே அனுபவம் மச்சி அனுபவம்..!
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


