மாரடைப்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்கும் ஆப்.. 14 வயது சிறுவன் சாதனை..!

  ஒரு ஆப் சில விநாடிகளில் ஒரு இருதய நோயை கண்டறிய முடிந்தால், எத்தனை உயிர்களை காப்பாற்றலாம் என்று கற்பனை செய்து பாருங்கள்! ஆம் இது உண்மையாகிவிட்டது,  காரணம் 14 வயது என்.ஆர்.ஐ மாணவர்…

app

 

ஒரு ஆப் சில விநாடிகளில் ஒரு இருதய நோயை கண்டறிய முடிந்தால், எத்தனை உயிர்களை காப்பாற்றலாம் என்று கற்பனை செய்து பாருங்கள்! ஆம் இது உண்மையாகிவிட்டது,  காரணம் 14 வயது என்.ஆர்.ஐ மாணவர் சித்தார்த் நந்தியாலா இப்படி ஒரு ஆப்பை கண்டுபிடித்துள்ளார்.

டல்லாஸை சேர்ந்த இளம் ஏஐ  ஆர்வலர்  நந்தியாலா, 96%க்கும் மேற்பட்ட துல்லியத்துடன் செயல்படும் ஒரு ஆப்பை உருவாக்கியுள்ளார். சமீபத்தில், நந்தியாலா இந்தியா வந்தபோது, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது,  சிறிய வயதிலேயே செய்த இந்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அவரது எதிர்காலத்திற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

நந்தியாலா கண்டுபிடித்த ஆப் பெயர் Circadian AI. இது ஸ்மார்ட்போன் மூலம் இதய துடிப்பு ஒலிகளை பதிவு செய்து, ஆரம்பகட்ட இருதய நோய்களை கண்டறியும் செயல்பாடு கொண்டது. இதை அமெரிக்காவில் 15,000க்கும் அதிகமான நோயாளிகள் மற்றும் இந்தியாவில் 700 நோயாளிகளிடம்  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் 96%க்கும் மேற்பட்ட துல்லியத்துடன் முடிவுகளை வழங்கும் என ஆந்திர முதல்வர் தன்னுடைய X பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

“14 வயது சிறுவன் நந்தியாலா இருதய நோய்களை கண்டறியும் செயல்முறையை எளிதாக்கியுள்ளார்! டல்லாஸை சேர்ந்த இளம் ஏஐ ஆர்வலர்  நந்தியாலாவை சந்திப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். Oracle மற்றும் ARM நிறுவனங்களில் உலகின் முன்னணி AI சான்றிதழை இந்த ஆப் பெற்றுள்ளது. அவருடைய Circadian AI ஆப், இருதய நோய்களை சில விநாடிகளில் கண்டறியும் என்பதால், இது மருத்துவத் துறையின் முக்கிய முன்னேற்றமாக இருக்கிறது,” என்று பதிவு செய்துள்ளார்.

நந்தியாலா   தந்தையான மகேஷ், ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவர் தனது குடும்பத்துடன் 2010-ஆம் ஆண்டு அமெரிக்கா குடிபெயர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது,