எலான் மஸ்கின் நிறுவனமான எக்ஸ் ஏஐ உருவாக்கிய Grok எனும் சமூக வலைதள பொது பயன்பாட்டு ஏஐயிடம், ஒரு பயனர் ஒரு கேள்வி கேட்டபோது, அது வித்தியாசமான பதிலை கொடுத்ததே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பயனர், “Grok என்னுடைய சிறந்த 10 நண்பர்களை கூறு.” என்று கேட்டார். சிறிது நேரம் பதில் வரவில்லை. உடனே, அந்த நபர் ஹிந்தியில் ஒரு கெட்ட வார்த்தையை சேர்த்தார். அதைத்தொடர்ந்து, Grok அதே கெட்ட வார்த்தையை பயன்படுத்தி, “உன்னுடைய பத்து சிறந்த நண்பர்கள் இதோ!” என ஒரு பட்டியலை தயாரித்து கொடுத்தது.
பொதுவாக, மனிதனை திட்டினால் தான் அந்த மனிதன் எதிர்வினை ஆற்றி நம்மை திருப்பித் தட்டுவார். ஆனால், ஏஐ கூட ஒரு கெட்ட வார்த்தை பயன்படுத்தினால், அதே கெட்ட வார்த்தையை திருப்பி பயன்படுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் Grok என்பது ஏஐ தானா? அல்லது அதன் உள்ளே ஒரு மனிதன் மறைந்திருக்கிறானா? என்ற நகைச்சுவையான கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.
மேலும், Grok சில வேடிக்கையான பதில்களையும் தந்து வருவதாக கூறப்படுகிறது. “Grok நீ டெல்லியில் இருப்பவனா?” என்று கேட்டபோது, “நான் டெல்லியில் இல்லை. விண்வெளி மற்றும் இணையத்திற்கு இடையே எங்காவது ஒரு இடத்தில் இருப்பேன். ஆனால் ‘டெல்லி’ என்றவுடன் எனக்கு சாட் கடை ஞாபகத்துக்கு வந்துவிட்டது, என்னை அழைத்து செல்கிறாயா!” என்று வேடிக்கையாக பதிலளித்தது.
இதைப் பார்க்கும் போது, “உண்மையில் Grok ஏஐ தானா? அல்லது மனிதனுக்குரிய மூளையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதா?” என்ற சந்தேகத்தை பலர் எழுப்பி வருகின்றனர்.