கூகுள் தனது Find My Device என்ற அம்சத்தை மேலும் புதுப்பித்துள்ளது. இதன் மூலம் உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் கண்காணிக்க முடியும். நீங்கள் ஏற்கனவே Google Maps மூலம் உங்கள் இருப்பிடத்தை பகிர்ந்திருந்தால், இந்த புதிய அம்சம் அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் காண்பிக்கும்.
புதிய அம்சத்தில் “People” என்ற புதிய பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் இருப்பிடத்தை பகிர்ந்தவர்களின் ரியல் டைம் இருப்பிடத்தைக் காணலாம். அவர்கள் எங்கு உள்ளனர்? உங்களிடமிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளனர்? அவர்கள் இருப்பிடம் கடைசியாக எப்போது புதுப்பிக்கப்பட்டது எப்போது? என்பதை அறியலாம்.
இந்த வசதி ஏற்கனவே Google Maps இருக்கின்றது என்றாலும், இந்த புதிய வசதி அதை இன்னும் எளிமையாக்குகிறது. ஒரு பயன்பாட்டில் இருந்து மற்றொன்றுக்கு மாற வேண்டிய அவசியம் இல்லாமல், எளிமையான, பயன்படுத்தத் தக்க வடிவமைப்புடன் அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் காணலாம்.
நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால், இந்த புதிய வசதி மூலம் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் எங்கே உள்ளனர் என்பதை ஒரே நேரத்தில் மிக எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
கூகுள் தனது Find My Device பயன்பாட்டை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஆனால் ஆப்பிள் தனது ஐபோனில் இந்த வசதியை பல ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.