தற்போது, நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடி வரும் நிலையில், ராகுல் காந்தி வியட்நாமில் ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளதாக பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு, ஹோலி பண்டிகை கொண்டாடவும் ராகுல் காந்தி வியட்நாமில் இருக்கிறார். அவர் தனது தொகுதியில் இருப்பதை விட, வியட்நாமில் அதிக நேரம் செலவழிக்கிறார். அவருக்கு வியட்நாம் மீது இந்த ஆர்வம் ஏன்?” என்று ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்த நாளிலும், ராகுல் காந்தி வியட்நாமில் தான் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு விளக்கமாக, காங்கிரஸ் தரப்பு, “வியட்நாம் நாட்டின் பொருளாதார அமைப்பை ஆய்வு செய்யவே ராகுல் அடிக்கடி அந்நாட்டிற்கு செல்கிறார்” என்று கூறி விளக்கமளித்துள்ளது.