AI வந்தால் எங்களுக்கு கவலையில்லை.. 7 வித பணிகள் செய்பவர்கள் மட்டும் நிம்மதி..!

  AI தொழில்நுட்ப காரணமாக மனிதர்களின் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாகவும் ஒரு கட்டத்தில் மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு இன்றி AI தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் என்றும் கூறப்படும் நிலையில் ஒரு சில தொழில்களில்…

ai vs human

 

AI தொழில்நுட்ப காரணமாக மனிதர்களின் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாகவும் ஒரு கட்டத்தில் மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு இன்றி AI தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் என்றும் கூறப்படும் நிலையில் ஒரு சில தொழில்களில் முழுமையாக AI ஈடுபட முடியாது என்றும் அந்த தொழில்களில் மனிதனால் மட்டுமே செய்யப்படும் வேலைகள் உள்ளன என்றும் சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக 7 விதமான பணிகளில் AI முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடியாது என்றும் மனிதர்களால் மட்டுமே இந்த வேலைகளை செய்ய முடியும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்,. அந்த 7 பணிகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

1. சட்ட வல்லுநர்கள்: அடிக்கடி மனிதர்களுக்கு தேவைப்படும் சட்டத்துறையினர்  தொழிலுக்கு AI மாற்றும் வாய்ப்பு வெறும் 29% மட்டுமே உள்ளது. சட்ட நெறிமுறைகள், வழக்குகளின் வாதம், தீர்ப்புகள் ஆகியவை மனித உளவுத்திறனுக்கு மட்டுமே உரியது.

2. மருத்துவம் மற்றும் சுகாதார மேலாண்மை அதிகாரிகள்:  மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளில் AI உதவலாம். ஆனால், பொதுமக்களுடன் 89.8% நேரடி தொடர்பு தேவை என்பதால், AI இந்த பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது:

3. மனிதவள மேலாளர்கள்: மனித உணர்வுகள் மற்றும் உளவுத்திறன் இவ்வேலையில் அவசியமானவை. இதை AI மனிதன் போலவே செய்யும் வாய்ப்பு 26% மட்டுமே ஆகும்.

4. பொது மேலாண்மை அதிகாரிகள்: இந்த பணியாளர்கள் நேரடியாக பொதுமக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதால் இதை AI மாற்றும் வாய்ப்பு வெறும் 36% மட்டுமே ஆகும்.

5. பயிற்சி மற்றும் மேம்பாட்டு நிபுணர்கள்: மனித உறவு இந்த வேலைக்கு கட்டாயம் தேவை என்பதால் இவ்வேலை AI  மாற்றும் வாய்ப்பு 29% மட்டுமே ஆகும்.

6. கட்டிட மற்றும் பொறியியல் மேலாளர்கள்:  47.1% மனித உறவு தேவை. இதை AI மாற்றும் வாய்ப்பு மிகவும் குறைவான 25% மட்டுமே.

7. கிராபிக்ஸ் டிசைனர்கள்: இந்த வேலையை முழுமையாக முடிக்க மனிதனால் மட்டுமே முடியும். ஏனெனில் வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் பிராண்டிங் நுணுக்கம் AI-யால் முற்றிலும் கையாள முடியாது.