இப்படி ஒரு அறிவுகெட்ட முட்டாள் யாராவது இருப்பாங்களா? ரயில் சீட் மேல் சிறுநீர் கழித்த வாலிபர்..!

  பெங்களூர் ரயிலில் ஒரு வாலிபர் ரயில் சீட்டின் மீது சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “இப்படி ஒரு அறிவு கெட்ட முட்டாள் யாராவது இருப்பார்களா?” என…

train1

 

பெங்களூர் ரயிலில் ஒரு வாலிபர் ரயில் சீட்டின் மீது சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “இப்படி ஒரு அறிவு கெட்ட முட்டாள் யாராவது இருப்பார்களா?” என கடுமையாக விமர்சித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

கவுகாத்தியில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ரயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த நிலையில், திடீரென ஒரு நபர் காலியாக இருந்த சீட்டின் மீது சிறுநீர் கழித்தார். இதை பார்த்த அருகிலிருந்த பயணி ஒருவர் அதிர்ச்சி அடைந்து, வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். மேலும், ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும் குறித்த வீடியோவை டேக் செய்தார்.

அந்த நபரின் செயலை பார்த்த பெண் பயணிகள் அருவருப்படைந்தனர். ஆண் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரயில்வே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, ரயில்வே துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ரயில்களில் தூய்மை மற்றும் ஒழுங்கு முக்கியம். இது பயணிகளுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

ஆனால், இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர் மனநல குறைபாடு உள்ளவர் என்று கூறப்படுகிறது.