இந்த நிலையில், இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பெங்களூர் உயர்நீதிமன்றம், டாக்டர் பிரியதர்ஷினி தனது கணவரின் வீட்டுக்கு செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.
இத்தகவலுக்கிடையில், பிரியதர்ஷினி தனது குழந்தைகளுக்கு பணம் கொடுக்குமாறு வலியுறுத்திக் கணவரின் வீட்டிற்கு சென்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், பிரியதர்ஷினி தனது மாமனார், மாமியார் மற்றும் டாக்டர் நவீன் குமாரை தாக்கினார்.
ஒரு கட்டத்தில், மாமியாரின் கழுத்தைப் பிடித்து இழுத்துச் சென்றதுடன், மாமனாரை காலால் மிதித்த காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. மேலும், அவரது மாமனார் நரசிம்மையா இதய நோயாளி என்பதும், மாமியார் ஏற்கனவே நோயிலிருந்து மீண்டு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும், பிரியதர்ஷினியை விசாரணை செய்த பிறகு எஃப்ஐஆர் தாக்கல் செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ள நிலையில், நெட்டிசன்கள் அந்த பெண் டாக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
https://x.com/karnatakaportf/status/1900140075075461479