வாட்ஸ்அப் மெசேஜ் மூலம், ரூ.1.95 அனுப்பவும்” என தொழிலதிபர் ஒருவர் அனுப்பி கோரியதாகவும், அதை நம்பி மேனேஜர் அந்த பணத்தை அனுப்பியுள்ள நிலையில். பின்னர், அது மோசடி என்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, 10 நிமிடத்திற்குள் சைபர் கிரைம் அந்த பணத்தை மீட்டுக் கொடுத்ததாக வெளிவந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள முன்னணி நிறுவனமொன்றின் தலைமை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் அனுப்பியதாக தோன்றிய வாட்ஸ் அப் செய்தியில், எனது வங்கி கணக்குக்கு உடனடியாக ரூ.1.95 கோடி அனுப்பவும்” என்று இருந்தது. அந்த மெசேஜ் அவரது உண்மையான வாட்ஸ் அப் கணக்கு மற்றும் புகைப்படத்தைப் போல இருந்ததால், மேனேஜர் உடனடியாக அதில் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பினார்.
பணம் டிரான்ஸ்பர் ஆனவுடன், நிறுவனத்தின் தலைவருக்கு SMS வந்தது. அதை பார்த்த அவர், உடனே மேனேஜரிடம் விளக்கம் கேட்டார். அதற்கு மேனேஜர், “உங்களிடமிருந்தே வாட்ஸ் அப் மெசேஜ் வந்தது” என்று கூறினார். இதையடுத்து, தலைவர் “நான் எதுவும் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பவில்லை” என்று தெரிவித்தார். உடனடியாக, சைபர் கிரைம் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.
பணம் பரிவர்த்தனை இன்று பிற்பகல் 1.02 மணியளவில் நடந்தது. உடனடியாக எந்த வங்கி கணக்கிற்கு அந்த பணம் சென்றது என்பதை சைபர் கிரைம் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனே அந்த அக்கவுண்ட் முடக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, 10 நிமிடத்திற்குள் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், மோசடி செய்தவர்களால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. பின்னர், மீண்டும் நிறுவனத்தின் அக்கவுண்டுக்கு அந்த பணம் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மோசடி நடந்ததும் உடனே சைபர் கிரைமிடம் புகார் அளிக்கப்பட்டதால், பத்தே நிமிடங்களில் மோசடி செய்யப்பட்ட பணம் மீண்டும் திரும்ப வந்தது. எனவே, இது போன்ற மோசடிகள் நடைபெறும் சூழ்நிலையில், பணம் அனுப்புவதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை உறுதி செய்த பின்னர் அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.