நம் உடம்பை Detox செய்வது அவ்வளவு முக்கியமானதா…? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா…?

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பரபரப்பான வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விலைவாசி உயர்வால் எல்லாமே ஆடம்பரமாக ஆகிவிட்டதால் பணத்தை தேடி எல்லோரும் வேலை வேலை என்று சுற்றிக் கொண்டிருக்கிறோம். அதனால் உணவு பழக்க வழக்கங்களில்…

detox

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பரபரப்பான வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விலைவாசி உயர்வால் எல்லாமே ஆடம்பரமாக ஆகிவிட்டதால் பணத்தை தேடி எல்லோரும் வேலை வேலை என்று சுற்றிக் கொண்டிருக்கிறோம். அதனால் உணவு பழக்க வழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

அவசரமாக இருப்பதால் கடையில் கிடைக்கும் ஆரோக்கியமற்ற packed உணவுகளை அதிகமாக மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அதிகப்படியாக துரித உணவுகளான ஜங்க் ஃபுட்ஸ் களையும் எடுத்துக் கொள்கிறார்கள். திரும்பும் இடம் எல்லாம் Fast food கடைகள் தான் ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் உடலில் சிறிது சிறிதாக நச்சு சேர்ந்து கொண்டிருக்கும்.

இந்த உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றாமல் நாம் விட்டுவிட்டால் தான் அது மாரடைப்பு, உள்ளுறுப்புகள் செயல் இழப்பு, அரிய வகை நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். அவை வராமல் தடுப்பதற்காக தான் நம் உடம்பை Detox செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

Detox என்பது வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ நம் உடம்பில் இருக்கும் நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதற்கான இயற்கை மூலிகை மருந்துகளை நாம் சாப்பிடும் போது உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுகள் வெளியேறிவிடும்.

நாட்டு மருந்து கடைகளில் உடலில் இருக்கும் நச்சை வெளியேற்றக்கூடிய கசாயம் செய்து பருகக்கூடிய மூலிகைகள் கிடைக்கும். நிலவேம்பு கஷாயம் சுக்கு குடிநீர் போன்றவற்றை நாம் தயார் செய்து குடிக்கும்போது இந்த துரித உணவுகளால் ஏற்படும் நச்சுக்கள் நம்ம உடம்பில் தங்கி இருப்பது அதுவாகவே வெளியேறிவிடும். இதை செய்வதால் நம் ஆரோக்கியம் மேம்படும்.