கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ரிசல்ட்.. மோனிகா ஏஐக்கு குவியும் ஆதரவு..!

  ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி என்ற சாட்போட் உலகம் முழுவதும் பிரபலமடைந்த நிலையில், இந்த தொழில்நுட்பம் கூகுளை கூட அசைத்து பார்த்தது  என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தற்போது, புதுப்புது ஏஐ…

monicka

 

ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி என்ற சாட்போட் உலகம் முழுவதும் பிரபலமடைந்த நிலையில், இந்த தொழில்நுட்பம் கூகுளை கூட அசைத்து பார்த்தது  என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தற்போது, புதுப்புது ஏஐ சாட்போட்கள் அறிமுகமாகி வருவதால், பெரிய பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

ஏற்கனவே சீனாவின் டீப்சீக் செயலி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, இதன் வருகை காரணமாக சாட்ஜிபிடி பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது சீனாவில் இருந்து இன்னொரு ஏஐ தொழில்நுட்பமான மோனிகா அறிமுகம் செய்யப்பட்டு, உலகம் முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஏஐ செயலி கட்டுரைகள் எழுதுவது, இலக்கணங்களை சரிபார்ப்பது, மொழிபெயர்ப்பு செய்வது உள்ளிட்டவற்றை கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து முடிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, எந்த மொழியில் இருந்தாலும், “மொழிபெயர்ப்பு” என்பதை கிளிக் செய்தவுடன் அடுத்த நொடியே அதன் முடிவுகளை பெற முடியும் என்பதுதான் இதன் முக்கிய சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

மேலும், இமேஜ் ஜெனரேட்டர், வீடியோ ஜெனரேட்டர், டிசைன் டூல் உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளதால், இதற்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது மட்டும் இல்லை, இந்நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. சீனாவின் முன்னணி நிறுவனமொன்று, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய முன் வந்துள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.