நேபாள மன்னர் நடத்திய பேரணியில் உபி முதல்வர் யோகி போஸ்டர்கள்.. எப்படி நடந்தது?

  நேபாள நாட்டின் முன்னாள் மன்னர் நடத்திய பேரணியில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதின் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் இருந்ததை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் முதல்வர் எப்படி…

yogi

 

நேபாள நாட்டின் முன்னாள் மன்னர் நடத்திய பேரணியில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதின் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் இருந்ததை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் முதல்வர் எப்படி நேபாள நாட்டின் முன்னாள் மன்னருக்கு நெருக்கமானார் என்ற குழப்பம் அனைவருக்கும் அதிகரித்துள்ளது.

உண்மையில், யோகி ஆதித்யநாத் கோராக்நாத் பீடத்தை வழிநடத்தி வருகிறார். இதன் மூலம் தான் நேபாளத்தின் முன்னாள் அரச குடும்பத்திற்கும் அவருக்கும் நீண்டகால உறவு இருப்பதாக தெரிகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு, நேபாள அரசாட்சியை முடிவுக்கு கொண்டு வரும் வரை, நேபாளத்தை ஆட்சி செய்த மன்னர் குடும்பத்தினர் கோராக்நாத் பீடத்துடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

1972ஆம் ஆண்டிலிருந்து கோராக்நாத் பீடத்தின் நிர்வாகத்தை கவனித்து வரும் துவாரிகா திவாரி, நேபாள அரச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக தெரிகிறது. மேலும், உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற பிறகு, இரண்டு முறை நேபாள நாட்டின் முன்னாள் மன்னர் அவரை சந்தித்துள்ளதாகவும், சமீபத்தில் கூட கும்பமேளாவிற்கு முன்னாள் மன்னர் பிரயாக்ராஜ்க்கு வந்திருந்த போது இரு தரப்பினரும் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

நேபாளத்தை ஒரு இந்து நாடாக மீண்டும் மாற்ற வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி வரும் நிலையில், இரு தரப்புகளுக்கான நட்பு மற்றும் உறவு மேலும் வலுப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.