நொய்டா என்ற பகுதியைச் சேர்ந்த ஜிஎஸ்டி அதிகாரி 15 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருக்கு அதிகப்படியான வேலை பளு மற்றும் மன அழுத்தம் இருந்ததால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது மனைவி குற்றம் தாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நொய்டா பகுதியில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் பணிபுரிந்தவர் சஞ்சய் ஷர்மா. இவர் சமீபத்தில் தான் குடியிருக்கும் அப்பார்ட்மெண்டில் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அவரது மனைவி தனது கணவருக்கு கூடுதல் பணிகள் அளிக்கப்பட்டதாகவும் அதை அவர் விரும்பவில்லை என்றும் அதனால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால் ஜிஎஸ்டி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர். சஞ்சய் ஷர்மா கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டதாகவும் அதன் காரணமாகத்தான் அவர் மன அழுத்தமாக இருந்ததாகவும், அந்த மன அழுத்தம் அதிகமானதால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகளும் முதல் கட்ட விசாரணையில் புற்றுநோய் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் தான் அவரது தற்கொலைக்கு காரணம் எனக் கூறியுள்ளனர். ஆனால் அதனை சஞ்சய் ஷர்மா குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
மறைந்த சஞ்சய் ஷர்மாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளதாகவும் ஒருவர் குருகிராமில் பணியாற்றுவதாகவும் இன்னொருவர் பல் டாக்டர் படிப்பு பயின்று வருவதாக கூறப்படுகிறது.