ஹரிஷ் கல்யாண் நடித்த “பார்க்கிங்” திரைப்படத்தில், காரை பார்க்கிங் செய்வதில் ஏற்படும் சண்டை, ஒரு கட்டத்தில் மிகப்பெரிய விபரீதமாக மாறும் அளவுக்கு செல்லும். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது அதே மாதிரி பார்க்கிங் சண்டையில் ஒரு இளம் ஞானி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானியாக இருக்கும் டாக்டர் அபிஷேக், பஞ்சாப் மாநிலத்தில் தனது வீட்டிலிருந்து காரை வெளியே எடுக்க முயன்றார். அப்போது, பக்கத்து வீட்டுக்காரர் பார்க்கிங் தொடர்பாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் கடுமையாக முற்றிய நிலையில், டாக்டர் அபிஷேக் சரமாரியாக தாக்கப்பட்டார்.
அப்போது அவர் கீழே விழுந்து, அவரது தலையில் பலத்த காயமுற்றதாகவும், உணர்வற்ற நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அச்சமடைந்த குற்றவாளியே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இரவு 8:30 மணியளவில் நடைபெற்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
விஞ்ஞானி அபிஷேக், ஸ்விட்சர்லாந்தில் பணியாற்றி வந்தவர். சமீபத்தில் இந்தியா திரும்பியதுடன், சில மாதங்களுக்கு முன்பு அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொலை குறித்து இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் ஒரு மேதாவியை இழந்துவிட்டோம். இப்படி ஒரு கொடூரமான தாக்குதலை சகிக்க முடியாது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
