உலகத்தில யாருக்கும் கிடைக்காத வரம் எனக்கு கிடைச்சிருக்கு… டி இமான் பகிர்வு…

இமான் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஆவார். தனது 15 ஆவது வயதில் இருந்து இசையமைக்க தொடங்கினார் இமான். 2002 ஆம் ஆண்டு விஜய் நடித்த தமிழன் திரைப்படத்திற்கு இசையமைத்ததன்…

imman

இமான் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஆவார். தனது 15 ஆவது வயதில் இருந்து இசையமைக்க தொடங்கினார் இமான். 2002 ஆம் ஆண்டு விஜய் நடித்த தமிழன் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் இமான்.

2003 ஆம் ஆண்டு விசில் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். தொடர்ந்து கிரி, மைனா, கயல், கும்கி, ஜீவா, ஜில்லா, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இமான். கும்கி திரைப்படத்தில் இவரது இசையமைப்பு மிகுந்த பாராட்டுகளை பெற்றது.

இவரது இசை தனித்துவமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும். இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இமான் உலகத்திலேயே யாருக்கும் கிடைக்காத வரம் தனக்கு கிடைத்திருப்பதாக பகிர்ந்து இருக்கிறார்.

இமான் கூறியது என்னவென்றால், என்னுடைய வாழ்க்கை ஒளிவு மறைவு இல்லாதது. என்னுடைய போனை யார் வேண்டுமானாலும் எடுத்து பார்க்கலாம். எனக்கு புகைப்பழக்கம் கிடையாது. மது பழக்கம் கிடையாது. பெண்கள் விஷயமும் கிடையாது. எல்லோரும் முதல் இரண்டை சொல்லிவிடுவார்கள். மூன்றாவதாக உள்ளதை சொல்ல மாட்டார்கள். நான் அதையே ஓபன் ஆக சொல்லுவேன். அதேபோல் எனக்கு படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும். உலகத்தில் பெரும் பணக்காரர்களுக்கு கூட கிடைக்காத அந்த வரம் எனக்கு கிடைத்திருக்கிறது என்று பகிர்ந்து இருக்கிறார் இமான்.