82 வயசு ஆகிடுச்சு இவன் என்ன பண்ண போறான்னு கேட்டாங்க… லண்டனில் இருந்து திரும்பியதும் இளையராஜா கூறிய முதல் வார்த்தை…

இளையராஜா இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என…

ilaiyaraja

இளையராஜா இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் இளையராஜா.

தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர் இளையராஜா. சிறந்த இசை அமைப்பாளர்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்று இருக்கிறார். இவரது தம்பி கங்கை அமரன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் இயக்குனராகவும் பணிபுரிந்தவர்.

மேலும் இளையராஜா அவர்களின் மகன் கார்த்திக் ராஜா ஒரு இசையமைப்பாளர் மற்றும் யுவன் சங்கர் ராஜா பிரபல புகழ்பெற்ற இசையமைப்பாளர் மற்றும் இவரது மறைந்த மகள் பவதாரிணி கூட சிறந்த பாடகி ஆவார். தற்போது இளையராஜா தான் உருவாக்கிய சிம்பொனியை லண்டனில் வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளார். லண்டனில் இருந்து திரும்பிய உடன் ஒரு சில விஷயங்களை இளையராஜா பகிர்ந்திருக்கிறார்.

இளையராஜா கூறியது என்னவென்றால், சிம்பொனியை நல்ல முறையில் அரங்கேற்றியது எனக்கு மிகவும் சந்தோஷம். இவனுக்கு 82 வயசாயிடுச்சு என்ன பண்ணப் போறான் அப்படின்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா நான் பண்ணைபுரத்தில் இருந்து வரும்போது வெறுங்காலோடு தான் வந்தேன். இன்றுவரை என் சொந்த காலில் தான் நிற்கிறேன். இளைஞர்கள் இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு உழைத்து முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பேசி இருக்கிறார் இளையராஜா.