சாம்பியன் டிராபி கோப்பையை வென்றது இந்தியா! இந்திய வீரர்கள் அபாரம்!

  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன் டிராபி இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து, இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.…

india won.jp

 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன் டிராபி இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து, இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. இதனால், இந்திய அணிக்கு வெற்றிக்காக 252 ரன்கள் எடுத்தால் போதுமானது.

இந்தியா 49வது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா மிக அபாரமாக ஆடி 76 ரன்கள் அடித்தார். அதேபோல், ஸ்ரேயஸ் ஐயர் 48 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ஜடேஜா, ஆறு பந்துகளில் ஒன்பது ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மீண்டும் சாம்பியன்ஷிப் கோப்பை கைப்பற்றியதை அடுத்து, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.