ஸ்ரேயா கோஷல் உடன் இணைந்து இந்த விஷயத்தை பண்ணணும்னு இருக்கேன்… டி. இமான் பகிர்வு…

இமான் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஆவார். தனது 15 ஆவது வயதில் இருந்து இசையமைக்க தொடங்கினார் இமான். 2002 ஆம் ஆண்டு விஜய் நடித்த தமிழன் திரைப்படத்திற்கு இசையமைத்ததன்…

imman

இமான் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஆவார். தனது 15 ஆவது வயதில் இருந்து இசையமைக்க தொடங்கினார் இமான். 2002 ஆம் ஆண்டு விஜய் நடித்த தமிழன் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் இமான்.

2003 ஆம் ஆண்டு விசில் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். தொடர்ந்து கிரி, மைனா, கயல், கும்கி, ஜீவா, ஜில்லா, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இமான். கும்கி திரைப்படத்தில் இவரது இசையமைப்பு மிகுந்த பாராட்டுகளை பெற்றது.

இவரது இசை தனித்துவமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும். இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இமான் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால், ஸ்ரேயா கோஷல் என்னுடைய இசையில் 80 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். அவரின் தாய்மொழி பெங்காலியாக இருந்தாலும் தமிழ் உச்சரிப்பை அவ்வளவு அருமையாக செய்வார். அவருடன் இணைந்து இசை கச்சேரி ஒன்று நடத்த வேண்டும் என்ற திட்டம் என்னிடம் இருக்கிறது என்று பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் இமான்.